வைரல்

இந்துத்துவா அமைப்பினரின் கொலை மிரட்டலால் பீஃப் உணவுத் திருவிழா ரத்து!

கொல்கத்தாவில் மாட்டிறைச்சி உணவு திருவிழா நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், விழா ஏற்பாடு செய்தவருக்கு கொலை மிட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

கொல்கத்தாவின் கஃபே உணவகம் ஒன்று ஜூன் 23-ம் தேதி பீஃப் உணவுத் திருவிழா நடத்த திட்டமிட்டிருந்தது. அதற்கான விளம்பரங்களையும் செய்யப்பட்டது. இந்த திருவிழாவுக்கு ஒரு புறம் ஆதரவு பெருக, மறுபுறம் கொலை மிரட்டல்களும் வந்துள்ளது.

கிட்டத்தட்ட 300 முறைக்கும் மேல் விழா ஒருங்கிணைப்பாளருக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது. இது குறித்து அந்த விழாவின் ஒருங்கிணைப்பாளர் கூறுகையில் ”எங்கள் விளம்பரங்களை முகநூலில் பதிவு செய்த பிறகு எங்கள் நிர்வாகிகளுக்கு பல அலைபேசி அழைப்புகள் வந்துக் கொண்டே இருக்கிறது. நேற்றைய தினம் மட்டும் 300 அலைபேசி அழைப்புகள் வந்துள்ளது. அதில் பேசியவர்கள் நேரடியாக கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இத்தனைக்கும் நாங்கள் இதை அரசியல் நிகழ்வாக திட்டமிடவில்லை. பீஃப் உணவு வகைகளை பிரபலப்படுத்தவே இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தோம். பீஃப் என்ற வார்த்தை தான் பிரச்னை என்பதால், பெயரை மாற்றி kolkatta Beep Festival என்று வைத்தோம். அப்போது கொலை மிரட்டல் தொடர்ந்தபடி தான் இருந்தது. எனவே, எங்கள் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளரின் பாதுகாப்பு கருதி இந்த திருவிழாவை நாங்கள் ரத்து செய்யும் நிலைக்கு ஆளாகியுள்ளோம்.” என்றார்.

தொடர் மிரட்டல் காரணமாக தனது சமூக வலைதள கணக்கை நீக்கி விட்டதாகவும், தனக்கு வந்த பெரும்பாலான அழைப்புகள் ராஜஸ்தான் , உத்திரபிரதேசத்தில் இருந்து வந்ததாக அந்த உணவக ஊழியர் கூறுகிறார். இந்த கொலை மிரட்டல்களை விடுத்தது இந்துத்துவா அமைப்பினராகத்தான் இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories