வைரல்

தன்பாலின ஈர்ப்பாளர்களின் 50 ஆண்டுகாலப் போராட்டம்: டூடுல் வெளியிட்டு பெருமைபடுத்திய கூகுள்!

ஸ்டோன்வால் கலவரத்தின் 50 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் கூகுள் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

தன்பாலின ஈர்ப்பாளர்களின் 50 ஆண்டுகாலப் போராட்டம்: டூடுல் வெளியிட்டு பெருமைபடுத்திய கூகுள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தன்பாலிலன் ஈர்ப்பாளர்கள் விடுதலையில் முக்கிய சம்பவமான, ஸ்டோன்வால் கலவரங்களின் 50 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம் தந்து முகப்பு பக்கத்தில் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

50 ஆண்டுகாலமாக தன்பாலின சேர்க்கை சமூகம் கடந்து வந்த பாதையையும், போராட்டங்களையும் விவரிக்கும் விதமாக இந்த டூடுல் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் நியூயார்க்கில் கிறிஸ்டோபர் தெருவில் அதன் ஆரம்ப நாட்களில் இருந்து இன்று உலகம் முழுவதும் தன்பாலின ஈர்ப்பாளர்களின் கொண்டாட்டங்கள் வரை இடம்பெற்றுள்ளது.

ஜூன் 28, 1969 அன்று நியூயார்க்கில் நடைபெற்ற தாக்குதலுக்கு எதிராக ஸ்டோன்வீலில் தன்பாலின சேர்க்கை சமுதாய உறுப்பினர்களின் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களாக இருந்தன. இந்தக் கிளர்ச்சி ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. அதுவே பின்நாளில், அமெரிக்காவில் உள்ள தன்பாலின விடுதலை இயக்கத்திற்கு வழிவகுத்தது. இதனால் தன்பாலின சேர்க்கை சமூகத்தினர் ஜூன் மாதத்தைப் பெருமையான மாதமாக கருதுகின்றனர்.

தன்பாலின உறவு இந்தியாவில் குற்றமில்லை என கடந்தாண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததும், இந்தியாவில் இந்தச் சட்டம் பல்வேறு தடைகளைத் தாண்டி நிறைவேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories