வைரல்

மீண்டு வா நேசா! - நேசமணிக்காக உருகிய ஹர்பஜன்!!

ஃபிரண்ட்ஸ் படத்தில் வரும் வடிவேலுவின் நேசமணி கதாபாத்திரத்தை வைத்து இணையத்தில் நெகிழ்ச்சி போர் நடத்தி #Pray_For_Nesamani என்ற ஹேஷ்டேக்கை உலகளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

மீண்டு வா நேசா! - நேசமணிக்காக உருகிய ஹர்பஜன்!!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

யாருயா அந்த நேசமணி? எனக்கே அவர பாக்கனும் போல இருக்கு, தி நேஷன் வாண்ட்ஸ் நோ, யய்யா சாமி நேசமணி நீ நல்லா இருக்கியாயா ஆத்தா வந்துருக்க பாருய்யா

என பல்வேறு வகையில் தங்களின் ஆதங்கங்களையும், வேதனைகளையும் மீம்ஸ்களாக கொட்டித் தீர்த்து வருகின்றனர் நடிகர் வடிவேலுவின் ரசிகர்கள்.

ஆமாங்க, #Pray_For_Nesamani ங்கர ஹேஷ்டேக் கூட இந்திய அளவு என்ன உலக அளவுல ட்விட்டரில் டாப் ட்ரெண்டிங்ல இருக்கு. இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி, பிரேக்கிங் நியூஸ், கவர் மேஷ் அப், நேசமணியின் சாதனைகள் என அனைத்தையும் தெறிக்கவிட்ட வண்ணம் உள்ளனர்.

மீண்டு வா நேசா! - நேசமணிக்காக உருகிய ஹர்பஜன்!!

நகைச்சுவை நடிகர் வடிவேலு தற்போது திரைப்படங்களில் காண முடியவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்களின் ஆதரவோடு மீம்ஸ்களில் வலம் வந்துக்கொண்டே இருக்கிறார் என்பது நிதர்சனம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வடிவேலுவின் வசனத்தையோ, உடல்மொழியையோ ஒரு நாளில் இரண்டு முறையாவது பயன்படுத்தி வருகின்றனர். அந்த அளவுக்கு மக்களின் வாழ்வியலோடு ஒன்றிபோயுள்ளார் வடிவேலு.

மீண்டு வா நேசா! - நேசமணிக்காக உருகிய ஹர்பஜன்!!

இந்த நிலையில், #Pray_For_Nesamani என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனதையொட்டி, திரைப்பிரபலங்களும் கூட நேசமணிக்கு என ஆச்சுனு கேட்டு ட்வீட் செய்து வருகின்றனர். இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கையும் நேசமணி விட்டு வைக்கவில்லை என்பதை அவரது ட்வீட் உறுதி செய்துள்ளது.

என் இனிய நண்பன் நேசமணிக்கு எனது மஞ்சள் நிற டர்பன் மீது அதீத பிரியம் உண்டு. இன்று மட்டும் அவன் அதை அணிந்திருந்தார்..டச்! மீண்டு வா நேசா! #Pray_For_Nesamani என தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

இதேபோல், இந்திய கிரிக்கெட் வீரர் தோனியால் மட்டும்தான் நேசமணியை காப்பாற்ற முடியும் என்று குறிப்பிட்டு வீசிய பந்தை தோனி பிடிப்பது போன்ற புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட்டரில் அப்லோட் செய்துள்ளது.

banner

Related Stories

Related Stories