வைரல்

இதுதான் பாஜகவின் மதச்சார்பின்மை! இஸ்லாமியர்களை கொடூரமாக தாக்கிய பசு காவலர்கள் (வீடியோ)

மத்திய பிரதேசத்தில் ஒரு பெண் உட்பட 3 பேர் மீது பசு குண்டர்கள் 'ஜெய் ஸ்ரீ ராம்' என முழக்கம் எழுப்பச் சொல்லி கொடூரமாக தாக்கியுள்ளனர். அவர்கள் தாக்குதல் நடத்திம் வீடியோ வெளிவந்துள்ளது.

இதுதான் பாஜகவின் மதச்சார்பின்மை! இஸ்லாமியர்களை கொடூரமாக தாக்கிய பசு காவலர்கள் (வீடியோ)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்திய பிரதேசத்தில் சியோனி நகரில் மாட்டிரைச்சி வைத்திருந்ததாக பெண் உட்பட 3 இஸ்லாமியர்கள் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர்.

வாகனத்தில் சென்று கொண்டிருந்த அந்த 3 பேரை, பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் குண்டர்கள் கும்பல் ஒன்று வழிமறித்துள்ளது. பின்னர் அந்த வாகனத்தில் இருந்த இளைஞர் ஒருவரை பசுக் குண்டர்கள் தரதரவென இழுத்துச் சென்று ஒரு மரத்தில் கட்டிவைத்துள்ளனர். 5-க்கும் மேற்பட்ட குண்டர்கள் உருட்டுக்கட்டையுடன் அவர் மீது தாக்குதல் நடத்தினர். அவரை தாக்கும் போது 'ஜெய் ஸ்ரீ ராம்' என முழக்கம் எழுப்பக் கூறி கொடூரமாக தாக்கியுள்ளனர்.

பின்னர் அந்த இளைஞரின் மனைவியை அவரின் செருப்பை கலட்டி அவரே அடிக்கும் படி துன்புறுத்தியுள்ளனர். அவரும் வலி தாங்கல் அவரது மனைவியை அடிக்கிறார். இந்த சம்பவம் நடைபெறும் போது அங்கு மக்கள் கூடி வேடிக்கை பார்க்கின்றனர். அவர்களை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவதில் ஈடுபட்டவர்கள் பசு பாதுகவலர்கள் என அழைக்கப்படும் இந்துத்துவா கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. தாக்குதல் நடத்திய பசுக் குண்டர்களில் ஒருவர் மட்டும் கைது செய்துள்ளது காவல் துறை. மற்றவர்களை தேடி வருவதாக தெரிவிக்கின்றனர். இந்த சம்பத்திற்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பலரும் புதிதாக பதவியேற்கும் பிரதமர் மோடிக்கு வீடியோவை அனுப்பி இது தான் உங்கள் ஆட்சியின் மதச்சார்பின்மையா? இது எப்படி எடுத்துகொள்வது குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories