வைரல்

இலங்கை பாதுகாப்புத்துறை செயலர் ஹேமசிறி பெர்ணான்டோ ராஜினாமா!

இலங்கை தொடர் வெடிகுண்டுத் தாக்குதல் எதிரொலியாக, பாதுகாப்புத் துறை செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

Hemasiri Fernando
Hemasiri Fernando
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஈஸ்டர் நாளன்று இலங்கையில் பல்வேறு இடங்களில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. 8 இடங்களில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்களில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஐநூற்றுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த பயங்கரவாத சம்பவம் உலகம் முழுவதும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே, குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாகத் தகவல் வெளியானது.

இலங்கை தாக்குதல் குறித்து உளவுத்துறை முன்பே எச்சரித்தும், அரசு அலட்சியம் காட்டியதாகக் கூறப்படுகிறது. எனவே, பாதுகாப்புத்துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பதவி விலகவேண்டும் என இலங்கை அதிபர் சிறிசேன வலியுறுத்தி இருந்தார்.

Srilanka Blast
Srilanka Blast

இந்நிலையில், இலங்கை பாதுகாப்புத் துறை செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் சிறிசேனவுக்கு அனுப்பிவைத்துள்ளார் ஹேமசிறி பெர்ணான்டோ.

banner

Related Stories

Related Stories