வைரல்

டிக் டாக் செயலி மீதான தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

டிக் டாக் செயலி மீது உயர் நீதிமன்றக் கிளை விதித்த தடை உத்தரவை நீக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

டிக் டாக் கோப்புப்படம்
டிக் டாக் கோப்புப்படம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டிக் டாக் எனும் சமூக வலைதள செயலி மூலம் பலர் வீடியோக்களை வெளியிட்டு பொழுதுபோக்காகவும், தங்களது திறமைகளை வெளிகாட்டியும் வருகின்றனர்.

அதே வேளையில் குழந்தைகள், பெண்கள் உபயோக்கிம் இந்த செயலியில் சில ஆபாச பதிவுகளும் இடம் பெறுகிறது என புகார் எழுந்துள்ளது.

டிக் டாக் செயலியால் சமூகத்தில் கலாசார சீரழிவு ஏற்பட வாய்ப்புள்ளது எனக் கூறி, இதனை தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

இதனை விசாரித்த நீதிமன்றம் டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய தடை விதித்து உத்தரவிட்டது.

உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவை எதிர்த்து சீனாவைச் சேர்ந்த டிக் டாக் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது. இந்த முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம்,

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவை நீக்க மறுப்பு தெரிவித்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 22ம் தேதி ஒத்திவைத்தது.

banner

Related Stories

Related Stories