
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி பிலிகுண்டுலுவில் கிடைக்க வேண்டிய 11 டி.எம்.சி பற்றாக்குறை நீரை, நாளொன்றுக்கு 1.3 டி.எம்.சி வீதம் 10 நாட்களில் கர்நாடகா திறந்துவிட உத்தரவிடக் கோரி த.வெ.க அரசு இரு இடைக்கால மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் காவிரி விவகாரத்தில் எத்தனை மனுக்களைத்தான் தாக்கல் செய்வீர்கள்? கேள்வி எழுப்பி த.வெ.க அரசின் மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது.
இந்நிலையில், Silent Mode-இல் உள்ள CM-இன் பதில் என்ன? என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் ” குறுவை போச்சு! சம்பாவும் கருகுது! Survival Mode-இல் தவிக்கும் விவசாயிகளுக்கு, Silent Mode-இல் உள்ள CM-இன் பதில் என்ன?
காவிரியில் 11 TMC தண்ணீர் கேட்ட தவெக அரசின் இரண்டு மனுக்களும் தள்ளுபடி! நாகையில் குறுவை சாகுபடிப் பரப்பு சுமார் 94% சரிவு! இன்று சம்பா பயிரைக் காப்பாற்ற விவசாயிகள் தண்ணீரையே விலைக்கு வாங்கும் அவலம்!
🌾 காவிரி நீருரிமையை நிலைநாட்ட என்ன செய்தீர்கள்?
🌾 பயிர்களைக் காப்பாற்ற என்ன திட்டம்?
🌾 பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் எப்போது?
🌾 விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது?
முதலமைச்சர் அவர்களே…
அனைத்துக்கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுங்கள்! தீர்மானங்களை நிறைவேற்றி, பிரதமரைச் சந்தித்து முறையிடுவோம்!
விவசாயிகளின் கண்ணீரைவிட உங்களது Ego பெரிதல்ல. பொறுப்புகளைத் தாரைவார்த்துவிட்டு Zero Accountability-யுடன் சொகுசாக இருக்கலாம் என்று எண்ணாமல், விவசாயிகளின் கண்ணீருக்குப் பதில் சொல்லுங்கள்" என கேள்வி எழுப்பியுள்ளார்.






