அரசியல்

மக்களையும் ஊடகங்களையும் திசைதிருப்ப... தொடரும் பொய் வழக்குகள்! : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

“அரசியல் காரணங்களுக்காகத் த.வெ.க. அரசு தொடரும் பொய் வழக்குகளை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொண்டு கழகம் வெல்லும்.”

மக்களையும் ஊடகங்களையும் திசைதிருப்ப... தொடரும் பொய் வழக்குகள்! : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாட்டில் த.வெ.க ஆட்சியின் நிர்வாகத் தோல்விக்குக் கண்டனங்கள் எழும்போது, அதன் மீது இருக்கும் மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப, தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு.

அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டு முதலீடுகளைப் பறிகொடுத்தது, த.வெ.க சட்டமன்ற உறுப்பினர்களின் பாலியல் சீண்டல்கள் உள்ளிட்டவற்றால், த.வெ.க-விற்கு எதிரான மனநிலை அதிகரித்து வரும் நிலையில், மதுரையில் தி.மு.க முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் சோதனை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது த.வெ.க அரசு

இதனைக் கண்டித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது,

மக்களையும் ஊடகங்களையும் திசைதிருப்ப... தொடரும் பொய் வழக்குகள்! : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

இந்தியாவிலேயே மிகப் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்கள் ஒன்றிய அரசின் அமைப்புகளால் தமிழ்நாட்டில் பிடிக்கப்படும் நிலையில், அவற்றில் இருந்து மக்களையும் ஊடகங்களையும் திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர் மூர்த்தி அவர்களைக் குறிவைத்து ரெய்டு நடத்தப்படுகிறது.

கையாலாகாத த.வெ.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேடும், த.வெ.க.வினரின் குற்றச் செயல்களும், சட்டமன்ற உறுப்பினர்களின் ஒழுங்கீனமும் சந்தி சிரிக்கும் ஒவ்வொரு முறையும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடத்துவது வாடிக்கையாகிவிட்டது.

அரசியல் காரணங்களுக்காகத் த.வெ.க. அரசு தொடரும் பொய் வழக்குகளை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொண்டு கழகம் வெல்லும்.

ஆறு மாத ஆட்சியில் சொல்லிக் கொள்ள எந்தச் சாதனையும் இன்றி, மக்களின் அவநம்பிக்கையை மட்டுமே சம்பாதித்துள்ள முதலமைச்சர் விஜய் அவர்கள் இனியும் 'தி.மு.க., தி.மு.க.,' என உச்சரித்து ஏமாற்றுவதைத் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது.

banner

Related Stories

Related Stories