தமிழ்நாடு

சென்னை to கேரளம்.. முகக்கவசம், 600 CCTV.. மூதாட்டியிடம் திருடிய நகைகளால் வள்ளலான நடிகர் சிக்கியது எப்படி?

திருடிய நகைகளில் சொந்த ஊர் மக்களுடன் தீபாவளி கொண்டாடிய இன்ஸ்டா பிரபலம் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை to கேரளம்.. முகக்கவசம், 600 CCTV.. மூதாட்டியிடம் திருடிய நகைகளால் வள்ளலான நடிகர் சிக்கியது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கேரளம் மாநிலம் சங்கனூரை சேர்ந்தவர் குமாரி (66) என்ற மூதாட்டி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் வசிக்கும் தனது மகன் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து கடந்த நவ.2-ம் தேதி மீண்டும் தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக சென்னையில் இருந்து திருவனந்தபுரம் விரைவு இரயிலில் பயணித்துள்ளார்.

தனது உடமைகளுடன் தனது பேத்தியின் திருமணத்திற்காக சுமார் 50 பவுன் வரையிலான தங்க நகைகளை பையில் கொண்டு சென்ற இவர், சற்று அசந்து தூங்கிய நிலையில், எழுந்து பார்த்தபோது, அவர் நகை வைத்திருந்த பை காணாமல் போயுள்ளது. திருச்சூர் பகுதி வந்தபோது பாதிக்கப்பட்ட மூதாட்டி புகார் கொடுத்துள்ளார்.

சென்னை to கேரளம்.. முகக்கவசம், 600 CCTV.. மூதாட்டியிடம் திருடிய நகைகளால் வள்ளலான நடிகர் சிக்கியது எப்படி?

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த இரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சுமார் 600 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டபோது, அந்த கொள்ளையர் பற்றிய உண்மைகள் தெரியவந்தது. கொள்ளையில் ஈடுபட்ட நபர் போலீசிடம் சிக்காமல் இருக்க மாஸ்க் அணிந்து கொண்டு, பல வழிகளில் தனது ஆடைகளை மாற்றிக்கொண்டு, பேருந்துகளிலும் மாறி மாறி பயணித்துள்ளார்.

விசாரணை தொடங்கும்போது மாஸ்க் அணிந்திருந்ததால் போலீசாருக்கு அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், இறுதியாக இந்த கொள்ளையில் திண்டுக்கல்லை சேர்ந்த பாலமுருகன் என்ற இன்ஸ்டா பிரபலம்தான் ஈடுபட்டிருந்தார் என்பதை கண்டறிந்தனர். இதையடுத்து திருடிய நகைகளை கோவையில் விற்பனை செய்ய முயன்ற பாலமுருகனை கேரளம் இரயில்வே போலீஸார் கையும் களவுமாக கைது செய்தனர்.

சென்னை to கேரளம்.. முகக்கவசம், 600 CCTV.. மூதாட்டியிடம் திருடிய நகைகளால் வள்ளலான நடிகர் சிக்கியது எப்படி?

மேலும் அவரிடம் இருந்து திருடப்பட்ட நகைகளில் இருந்து சுமார் 36.42 பவுன் தங்க நகையையும் மீட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலமுருகன் குறும்படங்கள், திரைப்படங்களில் நடித்தவர் என்பதும், வீடியோ எடிட்டராகப் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. மேலும் இன்ஸடாவில் அதிக Followers-களை கொண்ட இவர், தனது சொந்த ஊரில் வள்ளல் போல் நல்லவர் போல் ஒரு வேடத்தில் இருந்து வந்துள்ளார்.

மேலும் திருடிய நகைகளை வைத்து தனது ஊர் மக்களுக்கு பரிசுப் பொருள்களை வழங்கி தீபாவளியை விமர்சையாகக் கொண்டாடியுள்ளார். அதோடு இதனை ரீல்ஸாகவும் வெளியிட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே ஏற்கெனவே, மதுரையில் ஓடும் ரயிலில் கையடக்க லேப்டாப் திருடிய வழக்கும் உள்ளது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories