தமிழ்நாடு

8 ரூபாய் கேக் பாக்கெட்டுக்கா இவ்வளவு பீடிகை : அமைச்சர் ராஜ்மோகனுக்கு தி.மு.க பதிலடி!

பள்ளிகளிலும் மாணவர்களுக்கு எட்டு ரூபாய் மதிப்புள்ள ஒரு கேக் பாக்கெட் வழங்கப்பட்டிருக்கிறது.

8 ரூபாய் கேக் பாக்கெட்டுக்கா இவ்வளவு பீடிகை : அமைச்சர் ராஜ்மோகனுக்கு தி.மு.க பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் பள்ளிக் குழந்தைகள் மாயமாவது பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமலும், செஞ்சி சிறுமி மாயமாகி ஒரு மாதம் ஆகியும் இதுவரை எந்தத் துப்பும் கிடைக்காதது குறித்து எவ்வித வருத்தமும் படாமலும் நேற்று குழந்தைகள் தினத்தைக் கொண்டாடியிருக்கிறது இந்தத் த.வெ.க அரசு.

அதிலும் நேருவின் புகைப்படமே இல்லாமல், விஜய் படம் மட்டுமே பொறிக்கப்பட்ட கவர் கொண்ட கேக் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது ஏதோ பெரிய சாதனை போல் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பீற்றிக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், அமைச்சர் ராஜ்மோகனின் இந்த வீண் பெருமிதத்திற்குத் தி.மு.க சவுக்கடி கொடுத்துள்ளது. தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ சமூகவலைதளப் பதிவில், "பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மிகப்பெரிய சாதனையைச் செய்துவிட்டதாகப் புளகாங்கிதம் அடைந்திருக்கிறார். “ஒருங்கிணைந்த திட்டமிடல்”, “துல்லியமான தாக்குதல்”, “மிகப்பெரிய சாதனை” என்று அவர் கொடுக்கும் பீடிகையைப் பார்த்தால், தமிழ்நாட்டு மாணவர்கள் உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் சேர்ந்ததைக் கொண்டாடுகிறாரா? நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி பெறச் சென்றதைச் சொல்கிறாரா? அல்லது தமிழ்நாட்டின் கற்றல்-கற்பித்தல் உலகத்தரத்திற்கு உயர்ந்துவிட்டதைச் சொல்கிறாரா என்றெல்லாம் தோன்றுகிறது.

தமிழ் மாணவர்கள் ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்தபோதும், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களுக்குப் பயிற்சி பெறச் சென்றபோதும், வானவில் மன்றங்கள், கலைத்திருவிழாக்கள், திருக்குறள் மாநாடுகள், இலக்கியப் பயிற்சிகள், திறன் மேம்பாடு, உயர்கல்வி வழிகாட்டுதல், கல்லூரிக் கனவு, புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியபோதும்கூட திமுக அரசு இவ்வளவு பெரிய கொண்டாட்டத்தைச் செய்யவில்லை.

இவ்வளவு கொண்டாட்டத்திற்கும் பீடிகைக்கும் காரணம் என்ன தெரியுமா? நேற்று அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு எட்டு ரூபாய் மதிப்புள்ள ஒரு கேக் பாக்கெட்டை வழங்கியிருக்கிறார்கள். அவ்வளவுதான்! இன்னும் என்னவெல்லாம் பார்க்க வேண்டியிருக்கிறதோ" என தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories