
தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போயுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், சிறார் வன்கொடுமைகள், குழந்தைகள் மாயம், பட்டப்பகலில் கொலை, கொள்ளை, மர்ம மரணம், ரவுடிகளின் அட்ராசிட்டி உள்ளிட்ட விவகாரங்கள் அதிகரித்தே காணப்படுகிறது.
எனினும் இதனை கட்டுக்குள் கொண்டு வர முயலாத தவெக அரசை நோக்கி கேள்வி எழுப்பினால், தாங்கள் ஆட்சியில் இருப்பதை கூட மறந்து எதிர்க்கட்சிகளை நோக்கி கைகாட்டி ஒவ்வொரு முறையும் தப்பித்து வருகிறது. விஜய் ஆட்சியில் தமிழ்நாடு தொடர்ந்து பின்னோக்கி செல்கிறது. அண்மையில் கூட பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக நிர்வாகி பல்வேறு வலியுறுத்தல்கள், கண்டனங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.
இப்படியாக பெண்கள் பாதுகாப்பு விஜய் ஆட்சியில் பெருமளவு கேள்விக்குள்ளாகி வரும் நிலையில், சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சுரண்டை - சுந்தரபாண்டியபுரம் சாலையில் மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் ஒன்று உள்ளது. இதில் வாழை மற்றும் பூசணி பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் இன்று காலை அந்த வழியே வந்தவர்கள் அந்தத் தோட்டத்தில் எரிந்த நிலையில் பெண் சடலம் ஒன்று கிடைப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்ததோடு, காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கியுள்ளனர். எரிந்த நிலையில் மீட்கப்பட்ட அந்த பெண்ணுக்கு சுமார் 45 - 50 வயது இருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் சம்பவ இடத்திற்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், ஆலங்குளம் டிஎஸ்பி கிளாட்சன் ஜோஸ் மற்றும் போலீசார் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். தவெக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவியுள்ளது.






