
கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்தில் போலியாகப் பல புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டு மிகப்பெரிய முறைகேடுகள் நடந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. அதிலும் திரிஷா விஜய் என்ற பெயரில் ஓர் எழுத்தாளர் இருக்கிறார் என்பதெல்லாம் தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், முந்தைய தி.மு.க. அரசு மீது வீண்பழி போடும் த.வெ.க. அரசுக்குத் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது.
இது குறித்து தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் சமூகவலைதள பதிவில், ”புத்தக ஆர்வலர்களும் நெடிசன்களும் கேட்கும் இந்த கேள்விகளுக்கு நேரமையான பதில் உள்ளதா தவெக கட்சியின் emcee?
பெரியார் அறிவுலகப் புத்தகக் கொள்முதலில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அதன் முழுமையான விவரங்களை வெளியிட வேண்டிய பொறுப்பு தற்போதைய அரசுக்கு இருக்கிறது.
கேள்விகள்:
31.05.2026 – பெரியார் அறிவுலகத்தின் இறுதிக்கட்டப் பணிகளை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு செய்துள்ளார்.
07.06.2026 – இறுதிக்கட்டப் பணிகள் நடைபெறுவதாக அமைச்சர் சம்பத் பேட்டி அளித்துள்ளார்.
22.06.2026 – அகல்விளக்கு பதிப்பகத்தின் சில புத்தகங்களில் பெரியார் அறிவுலகத்தின் முத்திரைத் தேதி.
20.07.2026 – புத்தகங்கள் அடுக்கும் பணி நடைபெறுவதாக செய்தி வெளிவந்துள்ளது.
22.08.2026 – 80 ஆயிரம் புத்தகங்கள் கொண்டுவரப்பட்டுத் தயார்நிலையில் இருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது.
இந்தத் தேதிகள் பல முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன. தவெக கட்சியின் emcee ராஜ்மோகன் அவர்களே,
புத்தகக் கொள்முதல் ஆர்டர் வழங்கப்பட்ட தேதி என்ன?
தேர்வுக்குழு பரிந்துரைத்த புத்தகங்களின் முழுப் பட்டியல் எங்கே?
பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்கள்தான் கொள்முதல் செய்யப்பட்டனவா?
அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகப் புத்தகங்கள் மட்டும் ஜூன் மாத முத்திரையுடன் இருப்பதற்கான காரணம் என்ன?
புத்தகங்கள் பெறப்பட்ட தேதி, ஆய்வு செய்யப்பட்ட தேதி, பணம் செலுத்தப்பட்ட தேதி என்ன?
ஒவ்வொரு பதிப்பகத்திற்கும் வழங்கப்பட்ட தொகை மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனை விவரங்களை ஏன் வெளியிடக்கூடாது?
திமுக ஆட்சியில் கொள்முதல் முடிந்துவிட்டது என்றால், தற்போதைய அரசு பொறுப்பேற்ற பிறகு புத்தகங்களைப் பெற்றது, முத்திரையிட்டது, ஆய்வு செய்தது யார்? முறைகேடு இருந்ததாகச் சந்தேகம் எழுந்திருந்தால், அதை ஏன் உரிய முறையில் விசாரிக்கவில்லை?
குற்றச்சாட்டை முந்தைய ஆட்சியின் மீது சுமத்துவதற்கு முன், தற்போதைய அரசு தனது நிர்வாகக் காலத்தில் நடந்த ஒவ்வொரு நடவடிக்கைக்கும் கணக்குக் காட்ட வேண்டும்.
முழுமையான கொள்முதல் ஆவணங்கள்தான் உண்மையைத் தெளிவுபடுத்தும்!
கொள்முதல் ஆணை முதல் கடைசிப் பணப் பரிவர்த்தனை வரை, அனைத்தையும் தேதிவாரியாகப் பொதுவெளியில் வெளியிடத் தயாரா? என கேள்வி எழுப்பட்டுள்ளது.






