தமிழ்நாடு

தேவா குடும்பத்தில் தொடரும் பெருந்துயரம் : நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்!

நடிகர் கார்த்திக் சபேஷ் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

தேவா குடும்பத்தில் தொடரும் பெருந்துயரம் : நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த இளம் நடிகர் கார்த்திக் சபேஷ் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 37.

உடல்நலக்குறைவால், கடந்த சில நாட்களாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த நடிகர் கார்த்திக் சபேஷ் ’காதல் சொல்ல வந்தேன்’, ’உதயம் NH4’, ’வல்லவன்’, ’குளிர் 100°’, ’பர்மா’ மற்றும் ’பட்டத்து யானை’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவரது தந்தை இசையமைப்பாளர் சபேஷ் கடந்த ஆண்டுதான் உயிரிழந்தார். தந்தை மறைந்து ஒரு வருடத்திலேயே மகனும் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு, இவர் தேனிசைத் தென்றல் தேவா குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். நடிகர் கார்த்திக் சபேஷின் தந்தை சபேஷும், தேவாவும் சகோதரர்கள் ஆவார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இசையமைப்பாளர் தேவா மாரடைப்பால் காலமானார். தற்போது அவரது தம்பி மகனும் உயிரிழந்துள்ளது அவர்கள் குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories