தமிழ்நாடு

சாராய ஆலை அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதின் மர்மம் என்ன? : முதலமைச்சர் விஜய்க்கு அப்பாவு கேள்வி

செவிலியர் கல்லூரிகள் ஒவ்வொன்றிற்கும் அங்கீகாரம் வழங்க ரூபாய் 75 லட்சம் வீதம் பணம் வசூலிப்பது உங்களுக்கு தெரியுமா CM sir ?

சாராய ஆலை அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதின் மர்மம் என்ன? : முதலமைச்சர் விஜய்க்கு அப்பாவு கேள்வி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அதிகாரிகள் இல்லாமல் "ஆந்திரா ரெட்டி கேங்" மற்றும் "கலெக்சன் கேங்" ஆகியோருடன் ஆந்திரா சென்று ஆந்திர முதல்வர் மற்றும் சாராய ஆலை அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதின் மர்மம் என்ன? என முதலமைச்சர் விஜய்க்கு, முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அப்பாவு வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் ”பா.ஜ.க-வின் கங்காணியாக அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் கலெக்சன்குமார் என்ற சங்கி நிர்மல் குமார் தமிழகத்தின் மின் நிறுவுத் திறனில் 65% உற்பத்தியை 35% ஆக குறைத்து செயற்கையான மின்தட்டுப்பாட்டை உருவாக்கி, தினம் சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் தனியாரிடம் மின்சாரம் வாங்குவது, அறிவிப்பு இல்லா மின் கட்டண உயர்வு, ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி செல்போன் ரிசார்ச் செய்வது போல் மின் கட்டணமும் வசூலிக்க ஏற்பாடு செய்து தனியாருக்கு கொடுக்க பல ஆயிரம் கோடி ரூபாய் பெற்றிருப்பதாக வரும் செய்தி பார்ட்டி ஃபண்டா? அல்லது பர்சனல் ஃபண்டா CM sir ?

காற்றாலை, சோலார் மின் உற்பத்தி மூலம் பல ஆயிரம் MW மின் உற்பத்தி செய்துள்ள தனியாருக்கு ஒப்புதல் வழங்க

MW - 1-க்கு ரூபாய் 15 லட்சம் வீதம் சுமார் 1,500 கோடி ரூபாய் நிர்மல் குமார் வாங்கியிருப்பதாக உலா வரும் செய்திகளை இல்லை என்று மறுக்க முடியுமா CM sir ?

உங்கள் சொத்துக்களை சோதனையிட வந்த வருமான வரித்துறை அதிகாரி அருண் ராஜ்-ஐ கட்சியில் சேர்த்து அமைச்சரவையிலும் இடம் கொடுத்து செவிலியர் கல்லூரிகள் ஒவ்வொன்றிற்கும் அங்கீகாரம் வழங்க ரூபாய் 75 லட்சம் வீதம் பணம் வசூலிப்பது உங்களுக்கு தெரியுமா CM sir ?

கோட்டையில் யாருக்கு அதிகாரம் என்பதில் "ரெட்டிகேங் ", "தலைமைச் செயலாளர் ", அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த் , ஆதவ் அர்ஜுனா ஆகியோரிடையே நடக்கும் போட்டியை பார்த்து மற்ற அமைச்சர்கள் யார் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் "விளைந்த காட்டுக்குள் புகுந்த யானை" போல் சகட்டுமேனிக்கு மாமுல் வசூலித்து நாட்டை சூறையாடி வருவது உங்கள் கவனத்திற்கு வரவில்லையா CM Sir..?

இதே போல் தான் தமிழக அரசு அதிகாரிகள் இல்லாமல்

"ஆந்திரா ரெட்டி கேங்" மற்றும் "கலெக்சன் கேங்" ஆகியோருடன் ஆந்திரா சென்று ஆந்திர முதல்வர் மற்றும் சாராய ஆலை அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதின் மர்மம் என்ன? "தமிழகடாஸ்மாக் " நிறுவனத்தை அவர்களுக்கு விலைக்கு கொடுக்க முடிவு செய்து விட்டதாக வரும் செய்திகள் உண்மையா CM Sir ?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories