அரசியல்

பத்திரிகையாளர்களுக்கு ‘கொ* மிரட்டல்’ விடுத்த த.வெ.க நகரச் செயலாளர் பால்ராஜ்! - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

“இந்த டம்மி முதலமைச்சரின் ஆட்சியில் அவரது கட்சியிலேயே Druglords-ம், Cartel Mafia-வும் சுதந்திரமாகச் சுற்றி வருகிறார்கள்.”

பத்திரிகையாளர்களுக்கு ‘கொ* மிரட்டல்’ விடுத்த த.வெ.க நகரச் செயலாளர் பால்ராஜ்! - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

நாகை மாவட்டத்தில் த.வெ.க நிர்வாகி பூபாலன் வீட்டில் இருந்து சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான 137 கிலோ மெத்தம்பெட்டமைன் போ*ப் பொருள், ஒன்றிய வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள கண்டனப் பதிவு பின்வருமாறு,

“வரலாற்றில் இல்லாத அளவுக்கு 135 கிலோ மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்ததாக நாகை த.வெ.க நிர்வாகி பூபாலன் கைதான நிலையில், அது தொடர்பாக செய்தி வெளியிடும் செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறார் த.வெ.க-வின் நாகை நகரச் செயலாளர் பால்ராஜ்.

பத்திரிகையாளர்களுக்கு ‘கொ* மிரட்டல்’ விடுத்த த.வெ.க நகரச் செயலாளர் பால்ராஜ்! - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

பூபாலன் த.வெ.க-வில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், கட்சிப்பொறுப்பில் உள்ள இன்னொரு நிர்வாகி, போதைப்பொருள் கடத்திய நபருக்கு வக்காலத்து வாங்குவதும் - பத்திரிகையாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுவதும் ஏன்?

கட்சியா இல்லை போதைப் பொருள் கடத்தலின் கூடாரமா என்று கேட்கும் அளவுக்கு த.வெ.க போதைப்பொருள் Network-ன் அட்டூழியம் அதிகமாகிக்கொண்டே போகிறது.

இந்த டம்மி முதலமைச்சரின் ஆட்சியில் அவரது கட்சியிலேயே Druglords-ம், Cartel Mafia-வும் சுதந்திரமாகச் சுற்றி வருகிறார்கள்.

Reels எடுப்பதிலேயே காலத்தை கழிக்காமல் கொஞ்சம் Reality-க்கு வந்து போதைப்பொருள் நடமாட்டத்தையும் - அதைக் கடத்தும் த.வெ.க.வினரையும் முதலமைச்சர் கட்டுப்படுத்த வேண்டும்.”

banner

Related Stories

Related Stories