
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் தப்பித்தோம் பிழைத்தோம் என்று பெருமூச்சு விட்டு வெற்றி பெற்றுள்ளது த.வெ.க. 'விஜய் 5 நிமிடம் பிரசாரத்திற்குச் சென்றாலே போதும்' என்று வாய்சவாடால் விட்டார்கள். ஆனால், இந்தத் தேர்தலில் விஜய் என்ற பிம்பம் உடைந்து முருங்கைக்காய் பறிக்கும் அளவிற்குச் சென்றுவிட்டது.
ஆட்களே இல்லாத சந்துபொந்துகளுக்கெல்லாம் வணக்கம் சொல்லியபடி விஜயைத் தண்ணி குடிக்க வைத்தது. அதோடு, 'தேர்தலில் நாங்கள் பணமே கொடுக்கவில்லை' எனத் தம்பட்டம் அடித்துவரும் த.வெ.க-வின் முகத்திரையும் இடைத்தேர்தலில் கிழிந்து தொங்கியது.
பொதுத்தேர்தலின் போதே, த.வெ.க-வினர் பணம் கொடுத்ததாகவும், தேர்தலுக்கு நான் இவ்வளவு செலவு செய்தேன் எனத் த.வெ.க-வினரே புலம்பும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின.
ஆனால், மீசையில் மண் ஒட்டாத கதையாக, 'நாங்கள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கவில்லை' எனப் பேசிக்கொண்டே இருந்தார் ஓர் அமைச்சர். ஏன், இந்தத் தேர்தலில் த.வெ.க ஆட்சி அமைப்பதற்குக் காரணமாக இருந்த இடதுசாரிகளே, த.வெ.க வேட்பாளர்கள் பணம் கொடுப்பதாகப் புகார் கூறினார்கள்.
அப்போதும்கூட, பல்லிளித்துக் கொண்டே, 'நாங்கள் பணம் கொடுக்கவில்லை' என வாய்கூசாமல் ஓர் அமைச்சர் பொய் சொன்னார். ஆமாம், அவர் உண்மை சொன்னால்தான் ஆச்சரியப்பட வேண்டும். ஏனென்றால், அவருக்குப் பேசத் தெரிந்ததெல்லாம் பொய்... பொய் மட்டுமே.
தற்போது, மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட த.வெ.க வேட்பாளர் மரகதம் குமரவேலின் கணவர் குமரவேல், சுயேச்சை வேட்பாளர் கயல்விழி என்பவரிடம் விலை பேசியதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலில் போட்டியிடக் கூடாது என்பதற்காகவும், வாக்குகளைப் பிரிக்கக் கூடாது என்பதற்காகவும் கயல்விழி தரப்புக்கு ரூ. 1 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எம்.எல்.ஏ-க்களைக் குதிரை பேரம் நடத்தி விலைக்கு வாங்கியதால்தான் இந்தத் தேர்தலே நடந்தது. அவர்கள் தலைவனின் வழியைப் பின்பற்றுபவர்கள் வேறு என்ன செய்வார்கள்? வேட்பாளர்களை விலைக்குத்தானே வாங்குவார்கள். அவர்களுக்கு வேறு என்ன தெரியும்?






