தமிழ்நாடு

தவெக அமைச்சர்கள் கூட்டத்தில் சட்டென Power Cut... TENSION ஆன செங்கோட்டையன்!

தவெக அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சற்று சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

தவெக அமைச்சர்கள் கூட்டத்தில் சட்டென Power Cut... TENSION ஆன செங்கோட்டையன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, குற்றச்சம்பவங்கள் அதிகரித்த வண்ணமாக இருக்கிறது. இதில் பெரும்பாலான குற்றச்செயல்களில் தவெக-வை சேர்ந்தவர்களே ஈடுபட்டு வருகின்றனர். கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, சிறுமி வன்கொடுமை, ஏமாற்று வேலை என அனைத்து குற்றச்சம்பவங்களிலும் தவெக-வினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தவெக அமைச்சர்கள் கூட்டத்தில் சட்டென Power Cut... TENSION ஆன செங்கோட்டையன்!

அதோடு தமிழ்நாட்டு மக்களுக்கு என்று எந்த ஒரு நலத்திட்டத்தையும் தொடங்கி வைக்காத தவெக அரசு, மாறாக மின்வெட்டு பிரச்சினையை உருவாக்கியுள்ளது. ஆட்சி அமைந்ததில் மின்வெட்டு பிரச்சினை தொடர்ந்து இருக்கிறது. பொதுமக்கள் வீதிக்கு வந்து போராடி வரும் சூழலில் கூட தவெக அரசு கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது.

அதுமட்டுமின்றி, மின்தடைக்கு காரணம் ஆரம்பத்தில் திமுக என்று கூறி வந்த தவெக, தற்போது காற்று குறைவாக வீசுவதால், மழை இல்லாததால் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதே மின்வெட்டு காரணம் என்று கூறி வருகிறது. இந்த நிலையில், தற்போது தவெக அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் சற்று சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

தவெக அமைச்சர்கள் கூட்டத்தில் சட்டென Power Cut... TENSION ஆன செங்கோட்டையன்!

திருப்பூர் தாராபுரம் சென்னியப்பா நகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில், தவெக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், செங்கோட்டையன், அருண் ராஜ், விஜய் பாலாஜி, பர்வேஸ், ராஜேஷ்குமார், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் விஜய் பாஸ்கர், எம்.எஸ்.எம்.ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது நிகழ்ச்சி துவங்கி அமைச்சர் செங்கோட்டையன் பேசிக்கொண்டிருக்கும் போது, திடீரென மின்சாரம் தடைப்பட்டதால் சற்று சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகளுக்கு அங்குள்ள நிர்வாகிகள் ஒருவர் மாற்றிய ஒருவர் அழைப்பு விடுத்துக் கொண்டே இருந்தனர். அமைச்சர்கள் கூட்டத்திலும் மின்வெட்டு ஏற்பட்டது, தவெக-வினர் மத்தியில் சற்று பேசுபொருளாக மாறியுள்ளது.

banner

Related Stories

Related Stories