தமிழ்நாடு

காலை உணவுத் திட்டம் - முதல் நாளே பட்டினியோடு குழந்தைகள்: த.வெ.க அரசுக்கு தி.மு.க ஐடி விங் கடும் கண்டனம்!

காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தின் முதல் நாளே பல்வேறு குளறுபடிகள் அரங்கேறியுள்ளன.

காலை உணவுத் திட்டம் - முதல் நாளே பட்டினியோடு குழந்தைகள்: த.வெ.க அரசுக்கு தி.மு.க ஐடி விங் கடும் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிப் பெயர் மாற்றி, புதிய திட்டங்கள் போல் அறிவித்துப் பெருமை தேடி வருகிறது த.வெ.க அரசு. அதில் ஒன்றுதான் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்.இந்தத் திட்டத்தில் இருந்த 'முதலமைச்சர்' என்ற சொல் பொதுவானது என்பதைக் கூட அறியாத தற்குறி அரசு, முதலமைச்சர் என்ற சொல்லை நீக்கிக் 'காமராஜர் காலை உணவுத் திட்டம்' எனப் பெயர் மாற்றம் செய்துள்ளது.

இந்நிலையில், காலை உணவுத் திட்டம் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் இன்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் நாளே இந்தத் திட்டத்தைத் த.வெ.க அரசால் ஒழுங்காகச் செயல்படுத்த முடியவில்லை.

கிருஷ்ணகிரி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், இந்தத் திட்டம் தொடங்குவதைச் செய்தியாக்குவதற்காக மட்டுமே குறைந்த அளவில் உணவு சமைக்கப்பட்டுள்ளது. இதனால் உணவு உடனே தீர்ந்துபோனதால், பல மாணவர்கள் உணவு கிடைக்காமல் அவதிப்பட்டுள்ளனர். முதல் நாளே மாணவர்களைப் பசியோடு த.வெ.க அரசு காக்க வைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ரீல்ஸ் விளம்பரங்களுக்கு இந்த அரசு காட்டும் அக்கறையில் கொஞ்சமாவது குழந்தைகளின் மேல் காட்டியிருந்தால் கூட அவர்கள் பட்டினியோடு இருக்க மாட்டார்கள் எனத் தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து திமுக ஐடி விங் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”ஆட்சிக்கு வந்த நாள் முதலே விளம்பர வெறியிலும், குளறுபடியிலும் மட்டுமே நடந்துகொண்டு இருக்கிறது இந்த தற்குறிகளின் அரசு

இதன் உச்சமாக, இந்த அரசு இன்று காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்துள்ள நிலையில் கிருஷ்ணகிரி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், காலை உணவு தீர்ந்ததால் வகுப்புக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உணவுப் பற்றாக்குறை குளறுபடிகள் நடந்துள்ளதாக செய்திகள் வருகின்றன - ரீல்ஸ் விளம்பரங்களுக்கு இந்த அரசு காட்டும் அக்கறையில் கொஞ்சம் குழந்தைகளின் மேல் காட்டி இருந்தால் கூட அவர்கள் பட்டினியோடு இருக்க மாட்டார்கள்.

விவசாயிகள் - பொதுமக்கள் என எல்லோரையும் வஞ்சிக்கும் இந்த அரசு குழந்தைகளையாவது வஞ்சிக்காமல் இருக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories