தமிழ்நாடு

“மரியாதையும், பாதுகாப்பான கல்விச்சூழலும் கிடைப்பது குழந்தைகளின் உரிமை!” : கனிமொழி எம்.பி!

“உசிலம்பட்டியில் பள்ளிச் சேர்க்கைக்காகச் சென்ற சிறுமி, அங்கு அவமானப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், மனவேதனையில் அச்சிறுமி உயிரை மாய்த்து கொண்டதால், அவரது குடும்பம் நிலை குலைந்து போயுள்ளது.”

“மரியாதையும், பாதுகாப்பான கல்விச்சூழலும் கிடைப்பது குழந்தைகளின் உரிமை!” : கனிமொழி எம்.பி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாட்டில் கடந்த மூன்று மாதங்களில் மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் இந்த தற்கொலைகளுக்கு மனதளவில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளே காரணமாக அமைந்திருக்கிறது என்றும் அறியப்படுகிறது.

இச்சூழலில் உசிலம்பட்டியைச் சேர்ந்த 16 வயது சிறுமி தற்கொலை செய்தது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டது பின்வருமாறு,

“மரியாதையும், பாதுகாப்பான கல்விச்சூழலும் கிடைப்பது குழந்தைகளின் உரிமை!” : கனிமொழி எம்.பி!

“உசிலம்பட்டி அருகே 16 வயது தலித் சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. தனது எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடன் பள்ளிச் சேர்க்கைக்காகச் சென்ற அந்தச் சிறுமி, அங்கு அவமானப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், மனவேதனையில் அச்சிறுமி உயிரை மாய்த்து கொண்டதால், அவரது குடும்பம் நிலை குலைந்து போயுள்ளது.

ஒவ்வொரு குழந்தைக்கும் மரியாதையும், கண்ணியமும், பாதுகாப்பான கல்விச்சூழலும் கிடைப்பது அவர்களின் உரிமை.

இது போன்ற மனவேதனைக்கு எந்தக் குழந்தையும் தள்ளப்படக் கூடாது. இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை வழங்கி, நீதி நிலைநாட்டப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.”

banner

Related Stories

Related Stories