தமிழ்நாடு

Oxymoron-க்கு முகமிருந்தால் அது Toxic Vettri Kazhagam போலத்தான் இருக்கும் : திமுக IT WING விமர்சனம்!

Oxymoron-க்கு முகமிருந்தால் அது Toxic Vettri Kazhagam போலத்தான் இருக்கும்!

Oxymoron-க்கு முகமிருந்தால் அது Toxic Vettri Kazhagam போலத்தான் இருக்கும் : திமுக IT WING விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

த.வெ.க ஆட்சியில் பெண் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாதுகாப்பு இருக்கிறதா? என்ற கேள்விதான் தற்போது எழுந்துள்ளது. தினமும் பெண்கள் மீது நடக்கும் வன்கொடுமை சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

அதிலும் சொந்தகட்சிபெண் நிர்வாகியையே மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் எல்லாம் நாம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறோமா? என்ற ஒருவித பீதியில்தான் மக்கள் இருந்து வருகிறார்கள்.

கடந்த ஆட்சியின் நடந்த சட்டம் - ஒழுங்கு பிரச்சனைகளை விமர்சித்த விஜய், முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தனது ஆட்சியில் நடக்கும் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், வேடிக்கை பார்த்து வருகிறார்.

குறிப்பாக பெண்கள் மீதான குற்றங்களை தடுக்க 'சிங்கப்பெண் படை' தொடங்கப்படும் என்று சொன்னார். ஆனால் இதுநாள் அவரை அந்த திட்டம் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில்தான் இதுதான் உங்களின் Women Safety லட்சணமா? என தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி எழுப்பியுள்ளது.

இது குறித்து தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”Oxymoron-க்கு முகமிருந்தால் அது Toxic Vettri Kazhagam போலத்தான் இருக்கும்!

பெண்கள் பாதுகாப்புக்கு 'சிங்கப்பெண் படை' என தனக்குத் தெரிந்த அதே சினிமா பாணியில் ஒரு buildup.

சமீபத்தில் தூத்துக்குடியில் வேலே வாங்கித் தருவதாகக் கூறி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது TVK நிர்வாகிகள். அதை மறைக்க TVK MLA கொலை மிரட்டல் விடுவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத, இப்படி ஒன்று நடக்கிறது என்பதே கூட தெரியாத இந்த டம்மி CM தான், இந்தப் படையைத் தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளப் போகிறாராம்!இதுதான் உங்களின் Women Safety லட்சணமா?

Social media-வில் நியாயமான கேள்வி கேட்டால் கூட பெண்களின் குடும்பத்தார் வரை இழுத்து ஆபாசமாக வசைபாடும் உங்களின் 'Abusive Warriors'-ஐ அரவணைத்துக்கொண்டு, நீங்க பெண்களைக் காக்கப் போகிறீர்களா? It's pure hypocrisy!

திமுக ஆட்சியின் Pink Patrol வாகனங்களுக்கு 'சிங்கப்பெண் படை' என்று புதுசா Sticker ஒட்டுவதும், பெண் காவலர்களின் Uniform-ஐ மாற்றுவதும் தான் உங்க பிரம்மாண்ட திட்டமா? வெறும் PR Optics & Narrative விளம்பரங்கள் நிஜ பாதுகாப்பை தராது.

இத்திட்டத்தின் Launch-ஐ காரணமே இல்லாமல் பலமுறை ஒத்திவைத்ததிலேயே உங்களின் அலட்சியம் அப்பட்டமா தெரியுது.

இந்த படைக்கு தனியாக ஒதுக்கப்பட்ட Budgetary Allocation எவ்வளவு?

இது புது நிதியா? இல்ல பழைய Police funds-ஐ பிரித்துச் செய்யும் கண்துடைப்பா?

New vehicles, CCTV integration மற்றும் உள்கட்டமைப்புக்கு ஒதுக்கிய நிதி எவ்வளவு என்பதற்கு எந்த Data-வும் அரசிடம் இல்லை.

உங்கள் Abusive warriors-க்கு அத்துப்படியான Cyber crimes-ஐ தடுக்க, கையாள அதற்கான Training Modules & SOPs எங்கே?

கேமரா முன் ஆக்ரோஷமாக dialogue பேசி Acting பண்ணுவதும், Sticker ஒட்டுவதும் வெற்று கைதட்டலை வேணா பெற்றுத் தரும். But where is the real women safety?

சரி, இன்னைக்கு speech மனப்பாடம் பண்ணியாச்சா? இல்லை, இதிலும் தவறு நடந்தால் அதை எப்படி அடுத்தவர்கள் மீது பழி போடலாம் என்ற point கிடைக்காமல் உங்கள் script writer தடுமாறிக் கொண்டு இருக்கிறாரா? என கேள்வி எழுப்பியுள்ளது.

banner

Related Stories

Related Stories