தமிழ்நாடு

சோபா மாடல் ஆட்சியில் போலீசாராலும் பாதுகாப்பு இல்லை போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை : உதயநிதி கடும் கண்டனம்

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீரழிந்து போய் இருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சோபா மாடல் ஆட்சியில் போலீசாராலும் பாதுகாப்பு இல்லை போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை : உதயநிதி கடும் கண்டனம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதை அடுத்து சட்டம் ஒழுங்குப் பிரச்சினை அதிகரித்துள்ளது. குறிப்பாக, பெண்கள் மீதான வன்முறைகள் குறித்து வெளியாகும் செய்திகள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்த நிலையில், சென்னை வேளச்சேரியில் நடைபயிற்சியில் இருந்த 60 வயது மூதாட்டியை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று பலவந்தமாகப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளது.

அதேபோல், கோடம்பாக்கத்தில் காவலர் உட்பட 3 பேர் ஒரு சிறுவனுக்குக் கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்துப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அந்தச் சிறுவன் அவர்களிடம் இருந்து தப்பித்து அருகே இருந்த காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளான்.

சென்னை தலைநகரிலேயே இந்த இரண்டு கொடூரச் சம்பவங்கள் நடந்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இந்தச் சம்பவங்களுக்குக் கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், சென்னை கோடம்பாக்கத்துல Police உட்பட 3 பேர் சேர்ந்து, ஒரு சிறுவனை கட்டாயப்படுத்தி மது அருந்த வச்சு, Sexual Harassment-க்கும் ஆளாக்குன சம்பவம் அதிர்ச்சியை தருது.

Police-ட்ட இருந்து காப்பாத்திக்க, அந்த சிறுவன் Police Station-க்கு ஓட வேண்டிய நிலையில தான் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீரழிஞ்சு போய் இருக்கு.

இதுமட்டுமல்ல, வேளச்சேரியில Walking போக வெளிய வந்த 61 வயசு பெண்மணியை, ஒரு கும்பல் Sexual Harassment-க்கு ஆளாக்கின கொடுமையும் நடந்துருக்கு.

கும்பகோணத்துல ஆளுங்கட்சியினர் தாக்கினதுல ஒரு போலீஸ்காரருக்கே கை உடைஞ்சு போனதாவும் செய்தி.

இந்த Sofa Modelஆட்சி-யில, போலீசாலயும் பாதுகாப்பு இல்ல. போலீசுக்குமே பாதுகாப்பு இல்ல.

ஆட்சியை காப்பாத்திக்க MLA-க்கள் பிடிக்கிற வேலையை விட்டுட்டு, தன்னோட கட்டுப்பாட்டுல இருக்க Police Department-ஐ ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்க முதலமைச்சர் முயற்சி செய்யனும்.” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories