தமிழ்நாடு

பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றிய த.வெ.க அரசு : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், SCAM செய்கிறார்கள் என த.வெ.க அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றிய த.வெ.க அரசு : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்து த.வெ.க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் 01.05.2025 முதல் 28.02.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களுக்கு மட்டுமே இத்தள்ளுபடி பொருந்தும் என்பதால் த.வெ.க அரசின் அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது த.வெ.க அரசு என விமர்சித்துள்ளார்.

இது குறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”தேர்தல் பிரச்சாரத்தின் போது, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி தந்தார்கள்.

ஆனால், இப்போது ரூ.50,000 வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என்று சொல்லி இருக்கிறார்கள். இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி. மாபெரும் நம்பிக்கை மோசடி.

ஏற்கனவே, 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் என்று சொல்லிவிட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் அது கிடையாது என்று அதிர்ச்சி தந்தார்கள்.இப்போது, பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், SCAM செய்கிறார்கள்.

இப்படி, இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனசளவுல தயாரா இருக்கணுமா CM saar?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories