
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் 28.93 லட்சம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் இன்று காலை 9 மணி நிலவரப்படி 17.69 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 20.38 சதவீதம் வாக்குகள் பதிவு.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 56.81 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வாக்குப்பதிவு சதவீதம் மிகவும் வேகமாக உயர்ந்து வருகிறது.








