தமிழ்நாடு

“234 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணியே வெற்றி பெறும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

பா.ஜ.க என்ன வேண்டுமானாலும் செய்யட்டும், அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.

“234 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணியே வெற்றி பெறும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தஞ்சாவூரில் தனது தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு இன்று புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் தி.மு.க மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இந்நிலையில் இன்று காலை இலுப்பூர் பெரிய கடைவீதி வழியாக நடந்து சென்று பொதுமக்களையும், வியாபாரிகளையும் நேரில் சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

பிறகு புதிய பேருந்து நிலையம் அருகே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றபோது, பேருந்துகளில் பயணித்த பொதுமக்கள் உற்சாகமடைந்து அவருக்கு வரவேற்பு அளித்தனர்.தொடர்ந்து, விராலிமலை சாலையில் உள்ள ஒரு தேநீர் கடைக்குச் சென்ற முதலமைச்சர், அங்கிருந்தவர்களுடன் கலந்துரையாடி தேநீர் அருந்தினார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "பா.ஜ.க-வைச் சேர்ந்த எத்தனை பேர் தமிழ்நாட்டிற்கு வந்தாலும், தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிதான் வெற்றி பெறும். பா.ஜ.க என்ன வேண்டுமானாலும் செய்யட்டும், அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.

எடப்பாடி பழனிசாமி தோல்வியின் விளிம்பில் இருக்கிறார்.அ.தி.மு.க-வை டெல்லியில் அவர் அடமானம் வைத்துள்ளார். அ.தி.மு.க போன்ற கட்சிகள் டெல்லிக்கு அடிமையானது வேதனை அளிக்கிறது; இதற்காக நாம் வெட்கப்படுகிறோம்.

மக்களிடம் காணப்படும் எழுச்சியைப் பார்க்கும் பொழுது, 234 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணியே வெற்றி பெறும்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories