
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தத் தேர்தலில் ஆளும் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கும், அ.தி.மு.க.விற்கும் இடையே கடும் போட்டி நிலவி வரும் சூழலில், பல்வேறு கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தி.மு.க. தலைமையிலான 'மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி'யே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளன.
'லோக்போல்' அமைப்பின் கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, தி.மு.க. கூட்டணி 40.1 சதவீத வாக்குகளைப் பெற்று, 181 முதல் 189 தொகுதிகள் வரை கைப்பற்றும் எனத் தெரிவித்தது.
அதேபோல் போல் டிராக்கர்' வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், தி.மு.க. கூட்டணி 42.7% வாக்கு விகிதத்துடன் 172 முதல் 178 இடங்களை வென்று மீண்டும் அரியணை ஏறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ABP நாடு வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் தி.மு.க 40- 42% வாக்குகளைப் பெற்று 172 முதல் 178 இடங்களை பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என தெரிவித்துள்ளது. இப்படி வெளியாகும் அனைத்து கருத்துக்கணிப்பு முடிவுகளும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவதை உறுதிபடுத்தி வருகின்றன.






