தமிழ்நாடு

தமிழ்நாடு அரசின் தினை அடிப்படையிலான ஐஸ்கிரீம் தயாரித்தல் பயிற்சி... எங்கு? எப்போது? - விவரம்!

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் 2 நாட்கள் “ தினை அடிப்படையிலான ஐஸ்கிரீம் மற்றும் தினை மதிப்பு கூட்டல் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி” நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு அரசின் தினை அடிப்படையிலான ஐஸ்கிரீம் தயாரித்தல் பயிற்சி... எங்கு? எப்போது? - விவரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 2 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்  தினை அடிப்படையிலான ஐஸ்கிரீம் மற்றும் தினை மதிப்பு கூட்டல் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வரும் 19.02.2026 முதல் 20.02.2026  தேதி வரை காலை 9.30 மணி முதல் மதியம் 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் தினை அடிப்படையிலான ஐஸ்கிரீம் மற்றும் தினை மதிப்பு கூட்டப்பட்ட ராகி ஐஸ்கிரீம், சாத்துமாவு ஐஸ்கிரீம், கோதுமை ஐஸ்கிரீம், கம்பு ஐஸ்கிரீம், தினை மதிப்பு கூட்டப்பட்டவை சத்துமாவு வகைகள் எப்படி தயாரிப்பது பற்றி இப்பயிற்சியில் விளக்குவார்கள். மேலும் தயாரிப்பு சந்தைப்படுத்துதலின் அம்சங்கள் பேக்கிங் லேபிளிங் மற்றும் அதற்காண விலை வழிமுறைகள் ஆகியன கற்றுத்தரப்படும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விளக்கப்படும்.  

தமிழ்நாடு அரசின் தினை அடிப்படையிலான ஐஸ்கிரீம் தயாரித்தல் பயிற்சி... எங்கு? எப்போது? - விவரம்!

இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில்   (திங்கள் முதல் வெள்ளி வரை)   காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி  மற்றும்  தொலைபேசி / கைபேசி எண்கள்.

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை– 600 032. 

8668102600

8754495254

www.editn.in

முன்பதிவு அவசியம்: 

அரசு சான்றிதழ் வழங்கப்படும்

banner

Related Stories

Related Stories