
2026-27ம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை குறித்து இன்று (பிப்ரவரி 17) சட்டமன்றத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் பேசியவற்றில் முக்கியமான திட்டங்கள் பின்வருமாறு.
கடந்த ஐந்து வேளாண்மை நிதி நிலை அறிக்கைகளில் ரூ.1,94,076 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இயற்கைப் பேரிடர்களால் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் 16.20 இலட்சம் எக்டரில் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு 25.36 இலட்சம் விவசாயிகளுக்கு ரூ.2,045 கோடி நிவாரணம்.
விவசாயி பதிவு (Farmer Registry) திட்டத்தின் கீழ் ஆதார் எண்ணுடன் விவசாயிகளின் நில விவரங்களை இணைத்து 33 இலட்சம் பிரத்யேக விவசாயி அடையாள எண்கள் (Farmer ID) உருவாக்கம்.
அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைக்க ரூ.175 கோடியில், 3,435 சிப்பம் கட்டும் அறைகள். 8,218 மெ.டன் 5 குளிர் பதனக் கிடங்குகள். 3.44 இலட்சம் மெ.டன் கொள்ளளவிலான வெங்காய சேமிப்புக் கிடங்குகள். 15,606 விவசாயிகள் பயன்.
கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, தூத்துக்குடி மற்றும் சென்னையில் நான்கு உணவுப் பரிசோதனை ஆய்வகங்கள்.
கடந்த ஐந்து ஆண்டுகளில், 101 புதிய பயிர் இரகங்கள், 21 வேளாண் நுட்பங்கள் 16 புதிய பண்ணைக் கருவிகள் நமது உழவர் பெருமக்களின் பயன்பாட்டிற்காக வெளியீடு.
ரூ.83 கோடி மானியத்தில் 4,150 சூரிய சக்தி பம்புசெட்டுகள் 5,954 புதிய மின்மோட்டார் பம்புசெட்டுகளுக்கு ரூ.7.67 கோடி மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னை வேர்வாடல் நோய் மீட்புத் திட்டத்தின் கீழ் 17,816 எக்டர் தென்னை வேர்வாடல் நோயிலிருந்து மீட்கும் விதம் ரூ.18.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 6,300 பயனாளிகள் பயன்.
பனை மேம்பாட்டு இயக்கம் மூலம் 68 இலட்சம் பனை விதைகள் விநியோகம்.
1.28 இலட்சம் பனங்கன்றுகள் விநியோகம். 354 பனை மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் கூடங்கள். 650 மகளிருக்கு பனை ஓலை தயாரிக்கும் பயிற்சி & உபகரணங்கள். 1,350 நபர்களுக்கு பனை மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சி & உபகரணங்கள், 1.45 இலட்சம் நபர்கள் பயன். ரூ.80 கோடியில் பனை பொருட்கள் உற்பத்தி & விற்பனை.

நீர்வளத்துறை மூலம், அணைகளின் ஆயக்கட்டுப் பகுதிகளில் ரூ.498 கோடி செலவில் 4,580 தூர்வாரும் பணிகள்.
கடந்த ஐந்து ஆண்டுகளில், 186 இலட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதலுக்கு ரூ.2,118 கோடி ஊக்கத்தொகை.
2024-25 அரவைப் பருவத்தில் சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.349/- நிர்ணயிக்கப்பட்டு, கரும்பு விலை டன் ஒன்றிற்கு ரூ.3,500/- ஆக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
பசுமைக்குடில், நிழல்வலைக் குடில் சாகுபடி ரூ.91 கோடியில் 23,55,000 சதுர மீட்டரில் ஊக்குவிக்கப்பட்டுள்ளது.
சுவைதாளிதப் பயிர்களான மிளகாய், மஞ்சள், மிளகு, ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய் ஆகியவற்றின் சாகுபடி விரிவாக்கம். இதன்மூலம் 22,980 எக்டர் சாகுபடிப் பரப்பில் ரூ.32 கோடி மானியத்தில் 29,855 விவசாயிகள் பயன்.
ரூ.78 கோடியில் மக்காச்சோள உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டம் 1.50 இலட்சம் விவசாயிகள் பயன்.
24 இலட்சம் ஏக்கரில் ரூ. 174 கோடியில் பயறு பெருக்குத் திட்டம் 9.44 இலட்சம் விவசாயிகள் பயன்.
14 இலட்சம் ஏக்கரில் ரூ.229 கோடியில் எண்ணெய்வித்துப் பயிர்களின் சாகுபடி ஊக்குவிப்பு 7.54 இலட்சம் விவசாயிகள் பயன்.
2025-26 ஆம் ஆண்டில் முதன்முறையாக, டெல்டா அல்லாத மாவட்டங்களில் கார் / குறுவை / சொர்ணவாரிப் பருவங்களில் நெல் சாகுபடிக்கான ரூ. 115 கோடியில் சிறப்புத் தொகுப்புத் திட்டம்.
தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தில் 12.84 இலட்சம் விவசாயிகள் ரூ.178 கோடி நிதியில் பயன்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு 70% மானியம்.
456 பட்டதாரி இளைஞர்களுக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்க ரூ 4.56 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
நுண்ணீர்ப்பாசனத் திட்டம் மூலம் சிறு/குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம். இதர விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியம். 4,061 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 5,03,000 எக்டரில் நுண்ணீர்ப் பாசன அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளது. 5,13,000 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் மூலம் 15,00,000 காய்கறி விதைத் தொகுப்புகள், 9,00,000 பழச்செடித் தொகுப்புகள், 1,00,000 பயறுவகை விதைத் தளைகள், 25,00,000 பயனாளிகளுக்கு ரூ.19 கோடி நிதி விநியோகம்.
முதலமைச்சரின் 1,000 உழவர் நல சேவை மையங்கள் திட்டம் மூலம் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மைப் பொறியியல் பட்டதாரிகள், பட்டயதாரர்களுக்கு 30 % மானியமாக 3 இலட்சம் ரூபாய் முதல் 6 இலட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டம் மூலம் ஐந்து ஆண்டுகளில், 77,499 வேளாண் இயந்திரங்கள் & கருவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. 1,320 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் நிறுவப்பட்டன. இதற்கான மொத்த மானியம் ரூ.783 கோடி.

நெல் ஜெயராமன் அவர்களின் மரபுசார் நெல் இரகங்கள் பாதுகாப்பு இயக்கம் மூலம் 900 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் விதைகள் உற்பத்தி. 70,000 விவசாயிகளுக்கு விநியோகம்.
நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் கோயம்புத்தூரில் தொடங்கப்பட்டுள்ளது. இம்மையம் ஆராய்ச்சிகள், பயிற்சிகள், செயல் விளக்கங்களை மேற்கொள்கிறது.
கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மூலம் இதுவரை ரூ.707 கோடியில் 61,00,000 விவசாயிகள் பயன்.
58,712 ஏக்கர் தரிசு நிலங்கள் விளை நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன.
முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் ரூ.178 கோடி 21,35,000 விவசாயிகள் பயன்.
கடந்த ஐந்து வேளாண்மை நிதி நிலை அறிக்கைகளில் ரூ.1,94,076 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.






