தமிழ்நாடு

5 ஆண்டுகளில் பிரம்மாண்டமான வளர்ச்சி... 10 அத்தியாயங்களை பட்டியலிட்ட பொருளாதார ஆய்வறிக்கை - முழு விவரம்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (16.2.2026) தலைமைச் செயலகத்தில், மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட 2025-2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டார்.

5 ஆண்டுகளில் பிரம்மாண்டமான வளர்ச்சி... 10 அத்தியாயங்களை பட்டியலிட்ட பொருளாதார ஆய்வறிக்கை - முழு விவரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (16.2.2026) தலைமைச் செயலகத்தில்,  மாநில  திட்டக்  குழுவால் தயாரிக்கப்பட்ட 2025-2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு  பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டார்.

தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2025-26, கடந்த ஐந்து ஆண்டிற்கான மாநிலத்தின் பொருளாதாரத்தின் வளர்ச்சி பாதையை எடுத்துரைக்கிறது. இவ்வறிக்கை 10  அத்தியாயங்களில் பொருளாதாரத்தின் பல்வேறு முக்கிய அம்சங்கள் மற்றும்  அவை எவ்வாறு  செயல்பட்டது என்பதை விரிவாக விளக்குகிறது.

இவ்வறிக்கையானது, நம் மாநிலத்தின் பொருளாதார  செயல்பாடுகளை   விளக்குவதுடன், ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மற்றும் வளர்ந்த நாடுகளுக்கு இணையான தனிநபர் வருமானம் ஆகிய இரு இலக்குகளையும் அடைய கவனிக்க வேண்டிய  பகுதிகளையும் சுட்டிக்காட்டுகிறது.

இந்த தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை, கொள்கை வகுப்பாளர்கள், வணிகம், தொழில்வல்லுநர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு முக்கியமான தகவல்களை வழங்குகிறது. பொருளாதார போக்குகளை ஆவணப்படுத்துவதன் மூலம், தமிழ்நாட்டின் எதிர்கால மேம்பாட்டு உத்திகளை வடிவமைப்பதற்கும், சான்றுகள் அடிப்படையிலான கொள்கை முடிவுகளை வலுப்படுத்துவதற்கும் முக்கியமான கருவியாக செயல்படும்.

5 ஆண்டுகளில் பிரம்மாண்டமான வளர்ச்சி... 10 அத்தியாயங்களை பட்டியலிட்ட பொருளாதார ஆய்வறிக்கை - முழு விவரம்!

இந்நிலையில் தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழு துணைத் தலைவர் பேராசிரியர் முனைவர் ஜெ. ஜெயரஞ்சன் அவர்கள் சென்னை, சேப்பாக்கம், எழிலகம், 5ஆவது தளத்தில் உள்ள மாநில திட்டக் குழு அலுவலக கூட்ட அரங்கில் இன்று (16.02.2025) 'தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2025-2026 (Tamil Nadu Economic Survey 2025-2026)' தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது பேராசிரியர் முனைவர் ஜெ. ஜெயரஞ்சன் அளித்த பேட்டி பின்வருமாறு:-

2025-26-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாட்டினுடைய பொருளாதார ஆய்வு அறிக்கை, எகனாமிக்ஸ் சர்வே ஆஃப் தமிழ்நாடு. இப்பொழுது நமது மாநிலத்தினுடைய முதலமைச்சர், அவர்களை சந்தித்து, இந்த அறிக்கையை அளித்துவிட்டு இப்போதுதான் வந்திருக்கிறேன். 

முதல் முறையாக தமிழ்நாட்டுக்கு உண்டான பொருளாதார ஆய்வு அறிக்கை என்பது சென்ற ஆண்டு வெளியிட்டோம். அதனுடைய தொடர்ச்சியாக இந்த ஆண்டு வந்து இந்த ஆண்டும் ஒரு அறிக்கையை தயாரித்து அளித்திருக்கிறோம். இந்த அறிக்கை வந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டினுடைய பொருளாதாரம், அதனுடைய பல்வேறு துறைகள், அதில் ஏற்படக்கூடிய வளர்ச்சிகள், மாற்றங்கள் அது குறித்தெல்லாம் மிக விரிவாக பேசுகிறது.

மொத்தம் இந்த பொருளாதார ஆய்வறிக்கையில் 10 பிரிவுகள் இருக்கிறது.  மொத்தம் கிட்டத்தட்ட 260 பக்கம். அதில் முக்கியமான எந்தெந்த துறைகளில் எல்லாம் மிகவும் முக்கியம் என்று நாங்கள் நினைத்தோமோ, அதில் என்னென்ன மாற்றங்கள் இருக்கிறது என்று நினைத்தோமோ, அதை படித்துப் பார்க்கும்போது, நம்முடைய பொருளாதாரத்தில், நம்முடைய மாநிலத்தினுடைய பொருளாதாரம் என்ன ஆகியிருக்கிறது என்பது பற்றி யார் படித்தாலும் நமக்கு ஒரு புரிதல் ஏற்படும் வண்ணம், அந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆய்வறிக்கை எப்படி தயாரித்திருக்கோம் என்றால், அந்தந்தத் துறையில் உள்ள நிறைய ஆய்வு அனுபவம் உள்ள ஒருவரை அணுகி, அந்தத் துறையைப் பற்றி ஆய்வு செய்து, அவர்கள் ஒரு பொசிஷன் பேப்பர் என்பது போன்று அவர்கள் வழங்கியிருக்கிறார்கள். அதாவது ஒவ்வொருவரையும் அந்த மாதிரி 10 பொசிஷன் பேப்பரில் வழங்கியிருக்கிறார்கள். அந்த 10 பொசிஷன் பேப்பரில் இருந்து சம்மரி அதை எடுத்துதான், இந்த ஆய்வறிக்கையாக நாம் தயாரித்திருக்கோம். அதனால், ஒருவர் தயாரித்த ஆய்வறிக்கை அல்ல - 10 பேர் தயாரித்த தொகுப்பு. ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆய்வறிக்கையை தயாரித்திருக்கிறார்கள். 

5 ஆண்டுகளில் பிரம்மாண்டமான வளர்ச்சி... 10 அத்தியாயங்களை பட்டியலிட்ட பொருளாதார ஆய்வறிக்கை - முழு விவரம்!

முதலாவதாக தமிழ்நாட்டினுடைய பொருளாதாரத்தைப் பற்றி ஒரு பருந்துப் பார்வை. 

கடந்த ஐந்து ஆண்டுகளில், The state of the economy தமிழ்நாட்டினுடைய பொருளாதாரம் எப்படி இருக்கிறது என்பது குறித்து ஒரு பருந்து பார்வை. 

இரண்டாவதாக விலைவாசி நிலை - இந்த ஐந்து ஆண்டுகளில் நமது தமிழ்நாட்டினுடைய பொருளாதாரத்தில் விலைவாசி எப்படி வந்திருக்கிறது? அதை எப்படி எல்லாம் அது மேனேஜ் செய்திருக்கிறோம். ஃபுல் பிரைஸ் மேனேஜ்மென்ட் நம்முடைய கண்ட்ரோலில் இல்லாவிட்டாலும் கூட, ஒவ்வொரு மாநிலத்துக்கும் மாநிலம் இது போன்று விலைவாசிகள் ஏற்றத்தாழ்வுகள் நிகழ்கிறது என்பது நமக்கு தெரியும். அதற்கு அரசின் என்னென்ன வேலைகள் செய்கிறதோ, அதை பொறுத்து அது மாற்றம் அடைகிறது.

எடுத்துக்காட்டாக, நம்முடைய தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும் அனைவருக்குமான பொது விநியோகம் ஒன்று நடைபெற்று கொண்டிருக்கிறது. மற்ற மாநிலங்களில் உணவு பொருட்களில் ஏற்படக்கூடிய விலை தாக்கம் அந்த அளவுக்கு உக்கிரமாக தமிழ்நாட்டில் இருக்காது. அது கொஞ்சம் குறைவாக இருக்கும். இதற்கு காரணம் என்னவென்றால், பொது விநியோகம் -அனைவருக்குமானது என்பது ஒன்று. மற்றொன்று ஸ்பெஷல் பிடிஎஸ் என்று (Special PDS) என்று  ஒன்று வைத்திருக்கிறோம் இல்லையா? அதில் எக்ஸ்ட்ராவா நமக்கு என்ன கொடுக்கிறது? அதுபோல, அந்த விலைவாசி மற்றும் இதில் என்ன நடந்திருக்கிறது என்பது குறித்து இந்த இரண்டாவது பிரிவில் சொல்லப்பட்டிருக்கிறது.

மூன்றாவதாக,  வேலைவாய்ப்பு (Employment) - தமிழ்நாட்டில் மக்கள் தொகை என்பது ரீப்ளேஸ்மென்ட் லெவலுக்கு கீழே போயிருக்கிறது. அப்போது, புதியவர்களுடைய எண்ணிக்கை அதிகமாகவும், இளைஞருடைய எண்ணிக்கை குறைவாகவும் ஆகிக்கொண்டே வரும். இரண்டாவதாக, உயர்கல்வி படிப்பவர்களுடைய எண்ணிக்கை தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட அந்த வயதில் 100 பேர் இருக்கிறார்கள் என்றால், 50 பேர் உயர்கல்வி பெறுகிறார்கள் என்றால், அதன் விளைவாக மக்கள் தொகையினுடைய பெருக்கம் குறைந்தது.

ஞாயிற்றுக் கிழமைகளில், வேலை செய்வதற்கு, சாதாரண வேலைகள் செய்வதற்கு ஆட்கள் வந்து குறைவு, தட்டுப்பாடு ஏற்படும். அதன் விளைவாக எப்படி வட மாநிலத்தவர்கள் வேலை செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது.  அப்போது கூலி மட்டம் என்ன ஆயிருக்கிறது? மூன்றாவதாக, பெரும்பாலும்யான மாநிலங்களை எடுத்துக் கொண்டால், என்ன மாதிரி வேலை வாய்ப்புகள் இருக்கிறது என்றால், சுய வேலைவாய்ப்பு
(Self-employment) செய்கிறார்கள். சுயமாக வேலை செய்பவர்களின் என்ன பொருள் என்னவென்றால், எல்லாரும் வந்து ரொம்ப பெரிய தொழில் முயற்சியோடு இருக்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை. வேலை செய்வதற்கு ஒன்றும் இல்லாமல், தேவையில்லாமல் ஏதாவது செய்து கொண்டிருப்பது.

அவையெல்லாம் சுய வேலைவாய்ப்பில் வருகின்றது. அப்போது ப்ராக்ஸி என்னவென்றால், வேலையின்மைதான் அது. அது மாதிரி இல்லாமல், தமிழ்நாட்டு மற்றும் கேரளாவில் மட்டும் எப்படி இருக்கும் என்று கேட்டால், கூலி வேலை (wage labour) அதாவது வேலைக்கு சேரும்போது அதன் வழியாக கூலி பெறுவது என்பது அதிக அளவில் இருக்கிறது. அப்போது இதுதான் மற்ற மாநிலங்களுக்கும் நமக்கும் உள்ள வேறுபாடு. 

தொழில் துறை மிக வேகமாக வளர்வது என்பது, பொருளாதாரத்தில் மொத்தமாகவே வேளாண் துறையினுடைய பங்களிப்பு குறைந்து கொண்டே போகும். தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும், வேளாண் துறையினுடைய பங்களிப்பு தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இரண்டு விதமாக இருக்கிறது - ஒன்று பொருளாதாரத்துக்கு அதனுடைய பங்களிப்பு. அதாவது, எவ்வளவு மதிப்பு அங்கே உற்பத்தி செய்யப்படுகிறது என்பதையும், மொத்தமாக பொருளாதாரத்தில் எவ்வளவு பங்களிப்பு இருக்கிறது என்பதையும், வருடா வருடம் வரிசையாக குறைந்து கொண்டே வரும். அது ஒரு புறம்.

5 ஆண்டுகளில் பிரம்மாண்டமான வளர்ச்சி... 10 அத்தியாயங்களை பட்டியலிட்ட பொருளாதார ஆய்வறிக்கை - முழு விவரம்!

இரண்டாவது, எவ்வளவு பேர் அதை சார்ந்து இருக்கிறார்கள்? பொதுவாக, தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும், வேளாண் துறைக்கு 25 விழுக்காடு மக்கள் தான் வேளாண் துறைக்கு இருக்கிறார்கள். அதில் நிலவுடைமையாளர்கள் அல்லது வேலை செய்பவர்களாகவோ 25 விழுக்காடு இருப்பார்கள். 75 விழுக்காட்டில் வேளாண் அல்லாத பிற தொழில்கள் செய்வோர் இருக்கிறார்கள். தொடர்ந்து அதன் பங்களிப்பு ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே வருகிறது. அது வளர்ந்த நாடுகளை எடுத்துக் கொண்டால், அது இன்னும் அதிகமாக சிங்கிள் டிஜிட்டுக்கு போய்விடும். பெரிய வளர்ந்த நாடுகளில் எல்லாம், 4 விழுக்காடு, 3 விழுக்காடு ஆட்கள் தான் வேளாண் தொழிலில் இருப்பார்கள். அவர்களே வேளாண் தொழிலை விட்டுவிட்டு போய்விடுவார்கள். தமிழ்நாட்டில் எப்படி ஆயிருக்குன்னு கேட்டீங்கன்னா, ஒரு காலத்தில், நம்முடைய பிரதான தொழில் வேளாண் தொழில் என்பது சென்று, இப்போது 25 விழுக்காடு மக்கள் தான் அதில் இருக்கிறார்கள்.

அதனுடைய பங்களிப்பு எடுத்துக்கொண்டால், அதன் கிராஸ் வேல்யூம் குறைந்து கொண்டே வருகிறது.  அது குறைவது இல்லை. அது அப்படியே இருக்கும் - அது வளர்ந்துகொண்டே இருக்கும். ஆனால், அதைவிட மற்ற துறைகள் மிக வேகமாக வளர்வதாகவும், பெரியதாகவும், அதன் பங்களிப்பு சுருங்கி போய்விடும். அதுபோன்று வரும்போது மற்ற மாநிலங்கள் எல்லாம் எடுத்துக் கொண்டால், அதனுடைய பங்களிப்பு சுருங்கி போகும் – ஆனால், மக்கள் அதில் தான் இருந்து கொண்டே இருப்பார்கள். அதுபோன்று இருந்தால், வறுமை மிகவும் பெரிய அளவில் அதிகமாகிவிடும்.

ஆனால், இங்கே தமிழ்நாட்டில், அதனுடைய பங்களிப்பும் குறைந்துவிட்டது; அதை நம்பியிருக்கின்ற மக்களும் குறைந்து கொண்டே வருகிறார்கள். அதனால் என்ன ஆகும் என்றால், அது ஒரு ஆரோக்கியமான போக்கு. நிறைய துறையில் இருக்கக்கூடிய வாய்ப்புகள் சுருங்கி போய், ஆட்கள் அதை விட்டு வெளியேறாமல் இருக்கிறது என்பது பெரிய அவலத்தில் கொண்டு போய்விடும். அது போன்று நடக்காமல் இங்கே என்ன நடக்குது? நிறைய பேர் வேறு தொழில்களுக்கு வருவது, என்பது பெருமளவிலே நடந்து கொண்டிருக்கிறது. அதுதான் எம்ப்ளாய்மென்ட் சேப்டரின் முக்கியமான ஒரு காரணம். 

அடுத்தது முக்கியமான சாப்டர்  இண்டஸ்ட்ரியல் பாலிசி அண்ட் டெவலப்மென்ட் (Industrial Policy and Development) 

  தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது இரட்டை இலக்கில் வளர்ந்து 11.3 விழுக்காட்டில் வளர்ந்திருக்கிறது மற்ற எல்லா மாநிலங்களை விட மிக அதிகமான ஒரு வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. அந்த மாதிரி இருக்கும் பொழுது, உலகமெல்லாம் மூன்று விழுக்காடு வளர்ந்திருக்கிறது. இந்தியா ஏழு விழுக்காடு வளர்ந்தபோது, தமிழ்நாடு கிட்டத்தட்ட 11.3 விழுக்காடு. இந்த 11.3% வளர்ச்சி என்பது, எது பெருமளவில் கான்ட்ரிபியூட் செய்திருக்கிறது என்று பார்த்துர்கள் என்றால், முக்கியமா செகண்டரி செக்டார் (Secondary Sector). அதாவது மொத்தமாக இருக்கக்கூடிய பொருளாதாரத்தை மூன்றாக பிரிப்போம் - ஒன்று பிரைமரி செக்டார்.

அதாவது வேளாண் வேளாண் துறை சார்ந்த விஷயங்கள் - இரண்டாவது செகண்டரி செக்டார் என்பது மேனுஃபேக்சரிங்(Manufacturing), கன்ஸ்ட்ரக்ஷன் (Construction) ஆகியவை எல்லாம் செகண்டரி செக்டாரில் வரும். மூன்றாவது சேவைத்துறை, அதாவது சர்வீஸ் செக்டார். தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும், செகண்டரி செக்டாரில் இந்த 11.3% வளர்ச்சி என்பது மிகப்பெரிய அளவில் பங்களிப்பு செய்திருப்பது. அதிலும் குறிப்பாக, மேனுஃபேக்சரிங்கில் என்ன செய்திருக்கிறது என்றால், வரலாறு காணாத அளவில் 14% அளவில் வளர்ந்திருக்கிறது. ஒட்டு மொத்தமாக தமிழ்நாடு பொருளாதாரத்தினுடைய வளர்ச்சி என்பது பங்களிப்பு செய்திருப்பது மேனுஃபேக்சரிங். 

கன்ஸ்ட்ரக்ஷனும் பங்களிப்பு செய்திருக்கிறது. ஆனால் அதைவிட பெரிய அளவில் மேனுஃபேக்சரிங் பங்களிப்பு செய்திருக்கிறது. அதுதான் நம்முடைய தொழில் துறை மிக வலுவான ஒரு அடித்தள கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது. மேலும் மேலும், மூன்று நான்கு துறைகளில், தமிழ்நாடுதான் முன்னணி மாநிலமாக இருக்கும். வாகன உற்பத்தியாக இருக்கட்டும், வாகன உதிரி பாகங்கள் உற்பத்தியாக இருக்கட்டும், அது டெக்ஸ்டைல்ஸாக இருக்கட்டும், லெதராக இருக்கட்டும், கால்நடையாக இருக்கட்டும். இப்போது புதிதாக எலக்ட்ரானிக்ஸ் என்ற ஒரு துறை சேர்ந்திருக்கிறது.

எல்லாவற்றையும் விட தமிழ்நாடு ஒரு முன்னணி மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. தற்போது எலக்ட்ரானிக்ஸ் எல்லாம் புதிதாக வர ஆரம்பித்து ஒரு நான்கு, ஐந்து ஆண்டுகளில் பிரம்மாண்டமான ஒரு வளர்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

5 ஆண்டுகளில் பிரம்மாண்டமான வளர்ச்சி... 10 அத்தியாயங்களை பட்டியலிட்ட பொருளாதார ஆய்வறிக்கை - முழு விவரம்!

அதில் என்ன மாதிரியான வளர்ச்சி என்றால், ஒரு பக்கம் மதிப்பு கூடுதல் என்பது மட்டுமல்ல, மேலும், கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளில், என்ன மாதிரி பொருட்களை உற்பத்தி செய்கிறோம் என்பது மாறிக்கொண்டே இருக்கிறது. முதலில் ஆரம்பிக்கும்போது ஸ்பேர் பார்ட்ஸ் எல்லாம் வரும் அதை அசெம்பிள் செய்வது போன்று தான் ஆரம்பித்தோம்.

அதனுடைய காம்போனன்ட்சில் பல காம்போனன்ட்ஸ் மேனுஃபாக்சர் செய்கின்ற வேலைகள், துவக்கங்கள், பிள்ளைகள் எல்லாம் விளையாடி கொண்டிருக்கிறது. இது போன்று செய்யும் போது, எவ்வளவு மதிப்பு கூட்டப்படுகிறது.  இந்த மாதிரி பல மடங்கு தோல் இல்லாத செருப்பு ஏன் தயாரிக்கணும்? இங்கு உற்பத்தி செய்யக்கூடிய எலட்ரானிக்ஸ் வெளிநாடுகளில் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில், தமிழ்நாடு மிகப் பெரிய அளவில் ஏற்றுமதியில் வளர்ந்து கொண்டிருக்கிறது.

தோளில் இருந்து செய்யக்கூடிய காலணிகள் – அதுவும் முன்னணியில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால், உலகம் முழுவதும் என்ன நடந்துகொண்டிருக்கிறது தோல் அல்லாத காலணிகள் என்பது பெருமளவில் வந்துகொண்டிருக்கிறது. நீங்களே பெரும்பாலானவர்கள் போட்டிருக்கக்கூடிய காலணிகள் தோல் அல்லாத காலணிகளாகதான் இருக்கிறது.  நீங்கள் போட்டுக் கொண்டிருக்கக்கூடிய ஷூவாக இருக்கட்டும், செருப்பாக இருக்கட்டும். இப்போது உலகம் முழுவதும் அது போன்ற ஒரு போக்கு இருக்கிறது.

அதற்கு ஒரு பெரிய தேவை இருக்கிறது. இதுபோன்று, தேவை இருக்கும்போது நாங்கள் அதை போட்டு அதை உருவாக்குவதற்கு, பெருமளவில் முதலீடுகள் செய்யப்பட்டு, அங்கே தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதிலும் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து கொண்டிருக்கிறது. அங்க வரும்பொழுது என்னன்னு கேட்டீங்கன்னா, இதில் அதிகமான நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கிறது.

அதுவும் குறிப்பாக, பெண்களுக்கு மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்கிறது. எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் 90% பெண்கள் தான் இருக்கிறார்கள். அப்போது புதிதாக வரக்கூடிய தொழில்கள் எல்லாவற்றிலும் பெண்களுக்கு மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. 

தொழிற்சாலையைப் பொறுத்தவரைக்கும், புதிது திதாக சன்ரைஸ் இண்டஸ்ட்ரிஸ் என்று எடுத்துக் கொண்டால், மின்னணு வாகனம், மின்சார வாகனம் என்று புதிதாக வருகிறது என்றால், ஏற்கனவே இருந்த வாகனத்தைத் தாண்டி, அதிலும் முன்னணியில் வகிப்பது என்பதற்குண்டான சூழ்நிலையை ஏதுவாக்கி நாம் செய்ததால், எலக்ட்ரிக் மின்சார வாகனத்தில் நாம் முன்னணியில் நிற்கிறோம். அது இரு சக்கர வாகனமாகவோ, நான்கு சக்கர வாகனமாகவே இருக்கட்டும், இப்போது அடுத்த கட்டத்திற்கு எதற்கு போகிறோம் என்றால், இப்போது இந்தியாவில், நிறைய கோஸ்டல் இருக்கிறது, ரீஜியன் இருக்கிறது இல்லையா? நிறைய நீண்ட கடற்கரை இருக்கிற ஒரு இந்தியா இருக்கிறது. ஆனால், நம்மிடம் கப்பல் கட்டும் தொழில் என்பது வளரவே இல்லை.

சுத்தமாக ஒன்றுமே செய்யாமல் இருக்கிறோம் என்றால், அதற்கான ஒரு பெரு முயற்சி எடுக்கும் பொழுது, அது தேர்ந்தெடுக்கக்கூடிய இடம் எதுவாக இருக்கிறது என்றால், தமிழ்நாடு, குஜராத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். சென்ற முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு வந்து, தென் கொரியாவை சேர்ந்த ஹுண்டாய் நிறுவனம், தூத்துக்குடியில் மிகப்பெரிய கப்பல் கட்டும் தளம் ஒன்றை உருவாக்குவதற்கு முன் வந்திருக்கிறார்கள்.

அது வந்து அவர்கள் மட்டுமல்ல, அவர்களோடு சேர்ந்து மும்பையில் இருக்கக்கூடிய ஒரு நிறுவனம் மற்றுமொரு கப்பல் கட்டும் நிறுவனம் - இவர்கள் மூன்று பேருமே என்ன செய்றாங்க அப்படின்னா, பெருமளவில் தூத்துக்குடியில் இலட்சக்கணக்கான கோடிகள் முதலீடு செய்து, மற்ற எல்லா தொழில்களையும் விட மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய ஒரு தொழிலாக கப்பல் கட்டும் தொழில் கருதப்படுகிறது. 

இப்போது டெக்ஸ்டைல்ஸில் இருப்பதை விட, லெதர் ஃபுட்வேரில் இருப்பதை விட இது  பெரிய அளவில் மல்டிபிளேயர் எஃபெக்ட். நம்முடைய தொழில் துறை பெரிய அளவில் மாற்றத்தை உருவாக்கும். அது சிறிது காலம் ஆகும். மூன்று அல்லது நான்கு வருடம் ஆகலாம். ஆனால், அது நிச்சயமாக அவர்கள் அதற்குண்டான ஒப்பந்தங்களை கேட்டு, அதற்கான பணிகளை துவக்குவதற்கு தயாராக இருக்கிறார்கள். அது  ஒன்றிய அரசு அதற்கு உண்டான, அவர்கள் எல்லாம் நிறைய ஊக்கம் எல்லாம் கொடுத்திருக்கிறார்கள். அந்த வகையில், புதிய ஒரு தொழில்கள் துவங்குவது பெருமளவில் வந்து கொண்டிருக்கிறது. அதுதான் தொழில் துறையை பொறுத்தவரைக்கும் முக்கியமான ஹைலைட்ஸ். 

5 ஆண்டுகளில் பிரம்மாண்டமான வளர்ச்சி... 10 அத்தியாயங்களை பட்டியலிட்ட பொருளாதார ஆய்வறிக்கை - முழு விவரம்!

வேளாண்மை - வேளாண்மையைப் பொறுத்தவரைக்கும், அந்த காலநிலை மாற்றங்கள் பெரும் அளவில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மழை பெய்யாத நேரத்தில் பெய்கிறது -  வெயில் அடிக்காத நேரத்தில் அடிக்கின்றது. அதன் விளைவு ரொம்ப ஃப்ளக்சுவேஷன்ஸ். ஒரு பக்கம் இந்த வருஷம் முழுவதும் தண்ணீர் இருந்தாலும் கூட, கிட்டத்தட்ட 11 மாசம் தண்ணி ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால், என்ன பிரச்சனை என்றால், நடவு எல்லாம் நட்ட பிறகு கதிர் அறுக்கும்போது மழை பெய்கிறது. அது போன்று ஆகின்றபடியால், கிராப் லாசஸ் ஆகிறது. இதெல்லாம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. வேளாண் துறையை பொறுத்தவரைக்கும், உற்பத்தி எல்லாம் நடந்தாலும் கூட, உற்பத்தி திறன் எல்லாம் அதிகமாக இருந்தாலும் கூட அதனுடைய வளர்ச்சி என்பது கிட்டத்தட்ட ஒரு தேக்க நிலையை அடைந்திருக்கிறது 

ஒரு சில சப் செக்டார்ஸ்லாம் எடுத்துக் கொண்டால் குறைந்திருக்கிறது என்றே சொல்லலாம்.  ஆனால், தனித்தனியாக எடுத்துக் கொண்டால், தோட்டக்கலைத்துறை, பழங்கள் விளைவிப்பது, அதில் எல்லாம் நல்ல ஒரு பெரிய மாற்றமும், முன்னேற்றமும் நிலவி கொண்டிருக்கிறது. ஆனால், இதை நாம் எப்படி மேனேஜ் செய்யப் போகிறோம்  என்பதை நம் முன் இருக்கக்கூடிய மிகப்பெரிய சேலஞ்ச். அது நமக்கு மட்டுமல்ல, உலகம் முழுக்க இருக்கக்கூடிய நாடுகளுக்கு அது ஒரு பெரிய சேலஞ்ச், கிளைமேட் சேஞ்ச். அதுதான் வேளாண்மையை பொறுத்தவரைக்கும் மிக முக்கியமான ஒரு ஹைலைட். 

அடுத்தது, சோசியல் செக்டார். தமிழ்நாடு எப்பொழுதுமே தன்னுடைய வளர்ச்சியில் சோசியல் செக்டார்க்கு மிகப்பெரிய முக்கியத்துவம் தொடர்ந்து வழங்கிக் கொண்டே இருக்கிறது. அது என்ன நினைக்கிறது என்றால், மக்கள் வந்து ஒரு வாக்கு வங்கி மட்டுமல்ல, மக்களுடைய திறனை எவ்வளவுக்கெவ்வளவு நீங்கள் வளர்க்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு நம்முடைய பொருளாதாரம், நம்முடைய சமுதாயமும் பெரிய அளவில் மாற்றத்தை வளரக்கூடும் என்பது அசையாத ஒரு நம்பிக்கை. அது தமிழ்நாட்டுக்கென்று ஒரு சிறப்பு அம்சமாக இருந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இந்த பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

சோசியல் செக்டாருக்கு உண்டான இன்வெஸ்ட்மென்ட் மற்ற மாநிலங்கள் எல்லாம் குறைந்து கொண்டிருக்கும் பொழுது, ரிலேட்டிவா அக்ரிகல்ச்சர்லயோ அல்லது இண்டஸ்ட்ரிலயோ இன்வெஸ்ட் செய்கின்ற சோசியல் செக்டார் இன்வெஸ்ட்மென்ட்ட குறைத்துவிடுவார்கள். நம்முடைய மாநிலத்தில் மட்டும்தான் என்ன செய்கிறோம் என்றால், தொடர்ந்து அதற்கு உண்டான முக்கியத்துவத்தை அளித்துக் கொண்டே இருக்கிறோம். அதற்கான புதிய திட்டங்களை தீட்டிக் கொண்டே இருக்கிறோம். கூடுதலான பணத்தை ஒதுக்கிக் கொண்டே இருக்கிறோம். அதனால், தொடர்ந்து பெரிய அளவில் அது வளர்ந்து கொண்டிருக்கிறது. அதுதான் சோசியல் செக்டாரை பொறுத்தவரைக்கும் முக்கியமான ஒரு ஹைலைட். 

5 ஆண்டுகளில் பிரம்மாண்டமான வளர்ச்சி... 10 அத்தியாயங்களை பட்டியலிட்ட பொருளாதார ஆய்வறிக்கை - முழு விவரம்!

அடுத்தது இன்ப்ராஸ்ட்ரக்சர் அண்ட் எனர்ஜி (Infrastructure and Energy) 

இன்ப்ராஸ்ட்ரக்சர் அண்ட் எனர்ஜியை பொறுத்தவரைக்கும், பெரிய ஒரு விஷயம் தமிழ்நாடு ஒரு முக்கியமான ஒரு Non-renewable energy ஜெனரேட்டிங் ஒரு மாநிலமாக மாறிக்கொண்டிருக்கிறது. அது சோலாராக இருக்கலாம் அல்லது Wind-ஆக இருக்கலாம். அது இரண்டுமே பெரிய அளவில் நாம் அதை இன்வெஸ்ட் செய்து கொண்டிருக்கிறோம்.  அது ஜெனரேட்டிங் கெப்பாசிட்டி அளவுக்கு நம்மால் என்ன செய்ய முடியவில்லை என்றால், அதை எடுத்துக்கொண்டு வந்து பயன்படும் இடங்களுக்கு கொண்டு வந்து சேர்ப்பது என்பது ஒரு சிக்கல் இருக்கிறது.

மற்றொன்று, இந்த renewable energy மிகப் பெரிய சிக்கல் - நமக்கு மட்டுமல்ல, எங்கெல்லாம் அது இருக்கிறதோ, அங்கெல்லாம் இருக்கக்கூடிய சிக்கல் என்னவென்றால், எந்த சமயத்தில் உங்களுக்கு வேண்டுமோ, அது கண்டிப்பா கிடைக்கும் என்று உங்களால் சொல்ல முடியாது.  குறிப்பாக, உங்களுக்கு எல்லாம் நல்லா தெரிந்த விஷயம் என்னவென்றால், பவர் கன்சம்ப்ஷன் என்பது மாலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரைக்கும் மிகப்பெரிய அளவில் உச்சத்தை தொடக்கூடிய ஒரு நேரம் அது.

அந்த நேரத்தில் என்ன ஆகும் என்றால், சூரியன் இருக்காது. சூரியன் இருக்கும்போது சோலார் ஜெனரேஷன் கெப்பாசிட்டி ஜீரோ. காற்று எல்லா நாளும் அடிப்பது இல்லை. காற்று சில சீசனில் அடிக்கும், சில சீசனில் அடிக்காது, சில நேரம் அடிக்கும், சில நேரம் அடிக்காது. அதுபோன்று, ஒரு சூழல் இருக்கும்போது, நாம் அதை நம்பி என்ன செய்ய முடியாது என்றால், வீட்டில் கரண்ட் இருக்கிறதா, ஆபீஸில் கரண்ட் இருக்கிறதா என்று பார்க்க முடியாது.

அப்போது நாம் என்ன செய்ய வேண்டியது இருக்கு? அது ஒரு புறம் கெப்பாசிட்டி எல்லாம் பில்ட் செய்து கொண்டே வந்தாலும் கூட, இந்த நேரத்தில், இந்த பீக் டைம் டிமாண்ட பீட் செய்யவேண்டும் என்றால்,  நாம் இன்னும் எதை சார்ந்திருக்கிறோம் என்றால், நிலக்கரியை சார்ந்துதான் இருக்க வேண்டியது இருக்கிறது அல்லது ஹைட்ரோவை சார்ந்து இருக்கிறோம். ஹைட்ரோவிற்கு நமக்கு என்ன கெப்பாசிட்டி இருக்கிறது என்றால், மிகவும் குறைவான கெப்பாசிட்டிதான் நம்மிடம் இருக்கிறது.

அப்போது, அதனால் நாம் என்ன செய்ய வேண்டியது இருகிறது என்றால், நிறைய பெரும்பாலான அளவில் தெர்மல் பவர் தான் திரும்பத் திரும்ப யூஸ் செய்ய வேண்டியது இருக்கிறது. அப்படி இல்லை என்று சொன்னால், வட இந்தியாவில் எங்கெல்லாம் தெர்மல் பவர் ஸ்டேஷன் இருக்கிறதோ, இதற்கு மாற்று வழி என்ன என்று சொன்னால், மாற்று வழி ரெண்டு வழி, மூணு வழி சொல்றாங்க. ஒரு வழி என்ன அப்படின்னு கேட்டீங்கன்னாக்கா, பேட்டரி - பேட்டரியில் ஸ்டோர் செய்வது. ஆனால், ஒரு ஸ்டேட் முழுக்க தேவையான எனர்ஜியான மூன்று, நான்கு மணி நேரத்துக்கு தேவையான எனர்ஜியை ஸ்டோர் செய்வது, ரொம்ப எக்ஸ்பென்சிவான விஷயம்.

அந்த பேட்டரி ஸ்டோரேஜ் கெப்பாசிட்டி அவ்வளவு பெரிதாக உருவாக்க வேண்டும். இதெல்லாம் நாம் உருவாக்குவதற்கு உண்டான முயற்சி எல்லாம் எடுக்காமல் இல்லை. இதெல்லாம் நாம் முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அது முழுவதுமாக நம்முடைய கெப்பாசிட்டியை மீட் செய்யுமா. ஏனென்றால், இன்னும் யாருக்கும் எந்த சொல்யூஷனும் தெரியவில்லை. மொத்தமாக எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரே சொல்யூஷன் இன்னும் ஒன்றும் இல்லை. அது ஒரு சொல்யூஷன். அதே மாதிரி இன்னொரு சொல்யூஷன் என்னவென்றால், பம்ப் ஸ்டோரேஜ். பம்ப் ஸ்டோரேஜ் என்பது, இப்போது நன்றாக வெயில் அடிக்குது 10 மணிக்கு. எக்கச்சக்கமான சோலார் எனர்ஜி ஜெனரேட் ஆகும்.  நாம் அவ்வளவு கன்சம்ஷன் நமக்கு இருக்காது. அப்போது அந்த சர்ப்ளஸ் பவர் இருக்கும் இல்லையா, கீழே தண்ணீர் இருக்கும். அந்த தண்ணீரை பம்ப் வைத்து இறைத்து மேலே கொண்டு போய் வைத்துக் கொள்வார்கள்.

6 மணி ஆனபிறகு, பவர் எப்போது ஜெனரேஷன் அதிகமாக தேவைப்படுகிறதோ, அப்போது அந்த தண்ணீரை மேலே இருந்து கீழே இறக்குவார்கள். இறக்கி மறுபடியும் அந்த ஹைட்ரோல எப்படி பவர் ஜெனரேட் செய்வார்களோ, அந்த ஜெனரேட்செய்வார்கள். அப்போது இந்த பேலன்ஸ் இருக்கிறதே, அதை பகல் முழுவதும் இருக்கக்கூடிய எனர்ஜியை கொண்டு போய் ஸ்டோர் செய்து, அதை திரும்ப ரீஜெனரேட் செய்வது - அதற்கு என்ன செய்ய வேண்டியிருக்கிறது என்றால், அதற்கு இன்வெஸ்ட்மென்ட்ஸ் எல்லாம் செய்ய வேண்டியதிருக்கிறது. அதற்கு மூன்று, நான்கு இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கு உண்டான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்குண்டான இன்வெஸ்ட்மென்ட் போடப்பட்டுக் கொண்டிருக்கிறது.

5 ஆண்டுகளில் பிரம்மாண்டமான வளர்ச்சி... 10 அத்தியாயங்களை பட்டியலிட்ட பொருளாதார ஆய்வறிக்கை - முழு விவரம்!

அது இல்லாமல், இன்னொன்று என்னவென்றால், ஹைட்ரஜன். ஹைட்ரஜனுக்கு உண்டான ஒப்பந்தங்கள் எல்லாம் போடப்பட்டு உள்ளன. ஆனால், அதுவும் மறுபடியும் தூத்துக்குடியில் தான் வரப்போகிறது. சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று, இரண்டு, மூன்று நிறுவனங்கள் பெருமளவில் முதலீடு செய்வதற்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. அதுவும் சேர்ந்தது என்று சொன்னால், இது எல்லாமே மெட்டீரியலைஸ் ஆகும் போது என்ன ஆகும் என்று சொன்னால், நம்முடைய எனர்ஜி என்ன மாதிரி நாம் கன்சியூம் செய்து கொண்டிருக்கிறோம் என்பது, பெருமளவில் மாற்றம் பெறும். இப்போதே மாறிக்கொண்டிருக்கிறது. இன்னும் பெருமளவில் அது மாற்றம் பெறும். அப்படி வந்தது என்று சொன்னால், தெர்மல் ஒரு பெரிய அளவில், அதை நம்பி இருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் என்பது குறையும். இதுதான் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் எனர்ஜியை பொறுத்தவரைக்கும். 

அடுத்தது  சர்வீசஸ் அண்ட் டூரிசம் (Services and Tourism) இப்போது புதிதாக பல துறைகள், பல சர்வீசஸில் வந்து கொண்டிருக்கிறது.  உதாரணத்துக்கு சொல்ல வேண்டும் என்று சொன்னால், குளோபல் கேப்பபிலிட்டி சென்டர்ஸ் என்று சொல்லக்கூடிய உலக அளவில் இருக்கக்கூடிய திறன் மையங்கள் என்னவென்றால், ஒரு பெரிய நிறுவனம் இருக்கிறது என்று சொன்னால், அந்த நிறுவனத்திற்கு தேவையான ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட். அது  உலகம் முழுவதுமாக இருக்கக்கூடிய அவர்களுடைய ப்ராடக்ட்ஸ்க்கோ, சர்வீசஸ்க்கோ தேவைப்படக்கூடியது.

அதுக்குள்ள ஒரு (டெக்னோக்ராட்ஸ்) தொழில்நுட்ப வல்லுனர்கள் இருக்கிறார்களோ, சயின்டிஸ்ட், அவர்களை வைத்து அதற்கு உண்டான ஆய்வுகளை மேற்கொள்ளும் இடமாக அதை மாற்றுவது. வெஸ்டர்ன் கண்ட்ரிஸில் தான் வைத்திருப்பார்கள். இப்போது எப்படி ஆகிவிட்டது என்றால், அங்கே அதற்குண்டான ஆட்கள் குறைவாக குறைந்து கொண்டே இருப்பதால் என்ன செய்கிறார்கள் என்றால், இந்தியா போன்ற நாடுகளில் பெரிய கல்வி நிறுவனங்கள் நிறைய இருக்கிறது. நிறைய பேர் படித்துக் கொண்டு வருகிறார்கள்.  எல்லாம் இங்கே இருப்பவர்கள், அங்கே சென்று படித்துவிட்டு வருகிறார்கள். எல்லாம் இங்க இருக்கவன் தான் அங்க போய் வரைஞ்சிட்டு வரான். அப்போது இங்கே இருந்து அங்கே வேலை செய்துவிட்டு அந்த சம்பளத்தை கொடுப்பதைவிட, நாமே அங்கே சென்றுவிட்டால், இதில் பாதி சம்பளம் கொடுத்தால்போதும் என்று சொல்லி, அதே நிறுவனங்கள் கொண்டு வந்திருக்கிறார்கள்.

அது பெங்களூர் ஒரு இடமாக இருந்து கொண்டிருக்கிறது. ஜிசிசி உடைய சென்டராக ஆயிரத்துக்கு மேற்பட்ட ஜிசிசி சென்டர்ஸ் பெங்களூர்ல இருக்கிறது. அது நாம் விட்டுவிடக்கூடாது என்று, நாம் என்ன செய்யவேண்டும்? இந்த ஜிசிசிக்கு கொண்டு வருவதற்கு அதற்குண்டான ஊக்கத்தொகை எல்லாம் அறிவித்து, எத்தனை பேருக்கு இங்கே வேலை, இங்கே வாய்ப்பு அளித்து கொடுத்திருக்கிறோம். நாங்கள் மூன்று வருடங்கள் இருந்து, நாங்கள் ஒவ்வொரு வருஷத்துக்கும் இவ்வளவு ரூபாய் மானியமாக கொடுக்கிறோம்னு சொல்லி, அதன் வழியாக ஜிசிசி வந்து பெருமளவில் இதை கொண்டு வந்திருக்கிறோம்.

ஆனால் நாம் எதற்கு கொண்டு வருகிறோம் என்றால், நம்முடைய கல்லூரியில் படிக்கக்கூடிய மாணவர்கள் சாதாரண என்ட்ரி லெவலில் எப்படி இருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு கிடைக்கக்கூடிய சம்பளத்தை காட்டிலும், அந்த ஜிசிசிக்கு எல்லாம் போகிறார்கள் என்றால், ஐந்து பங்கு, ஆறு பங்கு சம்பளம் கூடிய வாய்ப்பு கிடைக்கக்கூடிய ஒரு இடம் அது. அதனால நிறைய அதாவது ஹை சேலரி அது கிடைக்கக்கூடிய ஒரு இடம் ஜிசிசி. அதற்காக தான் நாம் பெரிய அளவில் ஒரு கவனம் செலுத்த வேண்டிய சூழலில் இருக்கிறோம். 

இந்த ஜிசிசியை போலவே இப்போது ஃபின் டெக் என்று ஒரு பெரிய அளவில் அது ஒரு புது சர்வீசஸ் வந்து கொண்டிருக்கிறது. இப்போது ஃபின் டெக் என்கரேஜ் செய்வதற்கு இப்போது ஃபின்டெக் நம்முடைய ட்ரேட் சென்டரில் ஃபின்டெக் பார்க் ஒன்று இப்போது கன்ஸ்ட்ரக்ஷன் முடிய போகிறது. அது முடிந்து வேலையை துவக்கியது என்று சொன்னால், பெரும் அளவில் ஃபின்டெக் நிறுவனங்கள் வந்து தமிழ்நாட்டில் தொழிலை தொடங்குவதற்கு ஏதுவாக இருக்கும். 

மூன்றாவதாக, என்ன என்று கேட்டால், என்டர்டைன்மென்ட் - நாம் கேம் விளையாடுறோம் என்று சொன்னால், சிறிய குழந்தைகள் ஃபோனில் கேம்ஸ் விளையாடுவது - அதெல்லாம் செய்வது எல்லாம் மிகப்பெரிய பில்லியன்ஸ் ஆஃப் டாலர்ஸ் இருக்கக்கூடிய ஒரு தொழில். அந்த தொழிலில் பெரிய அளவில் ஒரு ஸ்கோப் இருக்கிறது. அந்த ஸ்கோப் எல்லாம் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொன்னால், அதற்கு உண்டான தொழில்நுட்பத்தை பயிற்றுவிக்கக்கூடிய இடங்கள் வேண்டும். தொழில்நுட்பங்களை பயிற்றுவிப்பது என்பது அதற்கு உண்டான சென்டர்ஸ் வேண்டும், அதற்கு உண்டான ஸ்டுடியோஸ் வேண்டும், அதற்கு உண்டான எக்யூப்மென்ட் வேண்டும். அதெல்லாம் உருவாக்குவது என்றால், இப்போது பூந்தமல்லியில் அதற்கு உண்டான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. அது நடந்து முடியும் பொழுது, அந்த  இண்டஸ்ட்ரியும் பெருமளவில் வளர்த்தெடுக்கப்படும். இதெல்லாம் வந்து புதுசாக வந்திருக்கக்கூடிய சர்வீசஸ்ல நாம் செலுத்தக்கூடிய கவனங்கள். 

இது மட்டுமல்லாமல், இன்னொரு பெரிய வந்து டூரிசம். டூரிசம் என்பது இந்தியாவில் தமிழ்நாடுதான் மிகப்பெரிய அளவில் நம்பர்ஸ் அட்ராக்ட் செய்கிறது டூரிஸ்ட். ஆனால், அவர்கள் மிகவும் குறைவான செலவுதான் இங்கே வந்து செய்வார்கள். ஏனென்றால், அதற்கு உண்டான ஸ்கோப் நாம் கொடுக்கவில்லை. அதற்கு என்ன செய்ய வேண்டியது என்றால், அவர்களுக்கு எதெல்லாம் ரொம்ப அட்ராக்டிவா இருக்குமோ, அதுக்கு தகுந்த மாதிரி அவர்கள் அந்த பேக்கேஜஸ் எல்லாம் உருவாக்க வேண்டும்.

5 ஆண்டுகளில் பிரம்மாண்டமான வளர்ச்சி... 10 அத்தியாயங்களை பட்டியலிட்ட பொருளாதார ஆய்வறிக்கை - முழு விவரம்!

அப்போது நாம் என்ன செய்யவேண்டும்? அதற்கு உண்டான பேக்கேஜஸ் எல்லாம் சரியான முறையில் உருவாக்கி, அதற்கு தகுந்த வசதி, போக்குவரத்து வசதி அதெல்லாம் உருவாக்க வேண்டும் என்று சொன்னால், மிகப்பெரிய ஒரு பொட்டன்ஷியல் இருக்கிறது. இது நாம் செய்யக்கூடிய சிறிய வேலைக்கே இவ்வளவு பெரிய ஒரு ரெஸ்பான்ஸ் இருக்கிறது என்று சொன்னால், அது பெரிய அளவுல அதை முயற்சி செய்து செய்தோம்னு சொன்னால், அது வந்து இன்னும் பெரிய அளவில் அது வளர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இன்னும் ஒன்று என்னவென்று கேட்டால், தமிழ்நாட்டில் இருந்து இந்த மாதிரி தமிழர்கள் பெருமளவில் உலகத்தின் பல நாடுகளில் குடியேறி இருக்கிறார்கள். அவர்களெல்லாம் ஒரு பெரிய இயக்கம் இருக்கிறது. என்னவென்றால், நம்முடைய ஊருக்கு வருவது, நம்முடைய ஊரை பார்ப்பது, கோயிலுக்கு போவது, மொட்டை அடிப்பது, காது குத்துவது, அதற்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்து கொடுத்தோம் என்று சொன்னால், அது ஒரு விஷயம். ஸ்கோப் இருக்கக்கூடிய ஒரு ஏரியாஸ். 

அடுத்தது  எக்காலஜி அண்ட் என்விரான்மென்ட்.  

இந்த நான்கைந்து ஆண்டுகளில், தமிழ்நாட்டில் நாம் செய்திருக்கக்கூடிய முயற்சிகள், பிரிசர்வேஷன் ஆஃப் எக்காலஜி அண்ட் என்விரான்மென்டில் புதிதாக என்னென்ன ஸ்டெப்ஸ் எல்லாம் எடுக்கவேண்டும் - அதெல்லாம் பெருமளவிலே செய்திருக்கிறோம். அதே சமயத்தில், பெரிய சேலஞ்சஸ் எல்லாம் இருக்கிறது. நான் ஏற்கனவே அக்ரிகல்ச்சர் பற்றி பேசும்போது சொன்ன மாதிரி, இப்போது நமக்கு கிளைமேட் சேஞ்ச் என்பது பெரிய சேலஞ்ச்.  கிளைமேட் சேஞ்ச் வரும்பொழுது வெறும் மழை பெய்வது, காற்று அடிப்பதைத் தாண்டி, வெயில் அடிப்பது. அதாவது அந்த ஹீட் வந்து எந்த இடத்தில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது அதற்கு உண்டான மிட்டிகேட்டிவ் ஸ்ட்ராட்டஜிஸில், ஒரு கான்சியஸான எஃபர்ட் எடுக்கவேண்டும். அதற்கு உண்டான பாலிசிஸ்.

நம்முடைய முன்னெற்பாடு வேண்டும். அது ஒரு டிசாஸ்டர். ஹீட் அஸ் எ டிசாஸ்டர் என்று நாம் தான் முதலில் செய்திருக்கிறோம். மெகா டிசாஸ்டர் மேனேஜ்மென்டில் என்ன மாதிரியான எஃபர்ட் எடுக்கிறோமோ அதெல்லாம் அதற்கு செய்யலாம். இது ஒருபுறம் அது நடந்து கொண்டிருந்தாலும் கூட, இன்னொரு பெரிய சேலஞ்ச் என்னவென்றால், ரைசிங் சீ லெவல்ஸ். கடலினுடைய நீர்மட்டம் இருக்குல்ல, அது தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. அது வரும்பொழுது என்ன ஆகும் என்றால், கடல் நீர் எங்கெல்லாம் தாழ்வான பகுதிகள் இருக்கிறதோ அங்கெல்லாம் உள்ளே வருவதற்கு சூழ்நிலை இருந்து கொண்டிருக்கிறது. அப்போது அந்த பகுதியில் எல்லாம் கண்டறிந்து அதற்கு என்ன வேலைகள் எல்லாம் நாம் செய்ய வேண்டும் என்பதற்குண்டான முன்னெடுப்புகளில் இருந்து ஒரு சில வேலைகளை செய்திருந்தாலும், இன்னும் பல வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.

எடுத்துக்காட்டாக சொல்லவேண்டும் என்றால்,  காவிரி டெல்டா பகுதியில் இருக்கக்கூடிய ஆறுகள் வந்து கடலில் சென்று கலக்கின்ற இடத்தில், கடல் தண்ணீர் உள்ளே வந்து ஆற்றுக்குள்ளே வந்திடாமல் இருப்பதற்காக என்ன செய்திருக்கிறார்கள் என்றால், எல்லா முகத்துவார பகுதியிலும் என்ன செய்யப்படுகிறது என்றால், டைட்ஸ் கட்டி, ஒரு எஸ்டிமேட் போட்டிருக்கிறார்கள். இந்த கடல் நீர் எவ்வளவு உயரத்துக்கு உயரும் என்று, அந்த உயரத்தை தாண்டி அதற்கு உண்டான மதகுகள், கதவனைகள் எல்லாம் போடப்பட்டிருக்கின்றன. அது மாதிரி போடும்போது என்ன ஆகும் என்றால், கடல் நீர் உள்ளே வராமலும் தடுக்கலாம்.. அது போன்று, அந்த ஷட்டர்ஸ் நீங்கள் போட்டு வைத்துவிட்டோம் என்றால், ஏற்கனவே வந்து புகுந்த கடல் நீரெல்லாம், அந்த நன்நீர் வந்து மேல மேல சேரும்போது என்ன ஆகும் என்றால், அந்த ஏற்கனவே இருந்த பிராக்கிஷ் வாட்டர்னுடைய குவாலிட்டி சேஞ்ச் ஆகி நல்ல நீராக மாறுவது என்பது நமக்கு ஏற்கனவே இருக்கக்கூடிய அனுபவம். அந்த மூன்று ஆண்டுகளுக்கு நாம் செய்த வேலையும் நமக்கு தெரிய வருகிறது. அது போன்ற ஒரு திட்டம்  பல இடங்களுக்கும் அது விரிவாக்கம் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. 

மற்றொன்று என்னவென்றால், அந்த இன்வேசிவ் ஸ்பீசிஸ்.  தாவரங்களாக இருக்கலாம் அல்லது அது மீனாக இருக்கலாம். அது போன்று நம்முடைய எக்காலஜி இன்வைட் செய்வது பெருமளவில் நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக இப்போது மேற்கு தொடர்ச்சி மலை. நம்முடைய ஊரில் ஓடக்கூடிய ஆறுகள் அனைத்திற்கும் உண்டான நீராதாரமாக இருப்பது மேற்கு தொடர்ச்சி மலைதான். அந்த மேற்கு தொடர்ச்சி மலையில், வேறு எந்த செடியும் வளர விடாத அளவுக்கு கிரீன் டெசர்ட்ன் என்று சொல்லலாம். பச்சேல்பசே என்று இருக்கும். கலர் கலராக இருக்கும். வேறு எந்த மரத்தையும் வளர விடாது, எந்த செடியையும் வளர விடாது. அது மாதிரி ஆகும்போது என்ன ஆகும் என்றால், அங்கு இருக்கக்கூடிய விலங்குகளுக்கு உண்டான சாப்பாடே கிடைக்காது. அந்த விலங்குகளை நம்பி இருக்கக்கூடிய மற்ற விலங்குகளுக்கு அதனால் ஒன்றும் இல்லாமல் போகும்.

அங்கு இருக்கக்கூடிய புல்வெளிகள் நம்முடைய எல்லா இரிக்கேஷனுக்கும் உண்டான ஆரம்ப புள்ளி, சோர்ஸ் அங்குதான் இருக்கிறது. இப்போது இது எல்லாமே நிறைய பாதிக்கப்படுகிறது என்று சொன்னால், இந்த இன்வெசிவ் ஸ்பேசிஸ்  நாம் கண்ட்ரோல் செய்ய வேண்டியது, டேமேஜ் செய்யவேண்டிய அவசியம் இருக்கிறது. அதற்கு உண்டான முன்னெடுப்புகள் அதெல்லாம் நாம் என்ன செய்திருக்கிறோம்? அது மட்டுமல்ல, இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு மாநிலமாக நாம் என்ன செய்திருக்கிறோம்? இந்த மாதிரி ஒரு கிளைமேட் கம்பெனி ஒன்று ஆரம்பித்திருக்கிறோம். அதன் வழியாக எப்படி பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட இருக்கின்றன என்பதை எல்லாம் டாக்குமெண்ட்டாக செய்திருக்கிறோம். இந்த எக்காலஜி அண்ட் என்விரான்மென்டில். 

கடைசியாக, பெண்களுடைய பங்கு என்பது மிக முக்கியமான ஒன்று. இந்தியாவில் தொழில் துறையில் வேலை செய்யக்கூடிய பெண்கள்ல மிகப்பெரும்பாலான கிட்டத்தட்ட 45 விழுக்காடு பெண்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். அப்போது வெறும் தொழிற்சாலையில் மட்டும் வேலை செய்வது என்பது ஒரு புறம். நகர்ப்புறங்களில் வேலைக்கு செய்யக்கூடிய பெண்களுடைய எண்ணிக்கை மிகவும் குறைவான அளவில் இருக்கிறது என்பது ஒரு புறம். மேலும் அதற்குண்டான infrastructure ஏன் வரவில்லை என்பது ஆதரவான அமைப்புகள் எதும் பெரிய அளவில் செய்யவில்லை  என்பதை எல்லாம் சுட்டிகாட்டி, அதையெல்லாம் நாம் இன்னும் செய்தோம் என்று சொன்னால், இன்னும் பெண்களுடைய பங்களிப்பு என்பது பெருமளவில் இருக்கும். 

இதுதான் நாம் இந்த 10 பிரிவுகளில் சொல்லப்பட்டிருக்கக்கூடிய விஷயங்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் எப்படி வளர்ந்திருக்கிறது, என்னனென்ன மாற்றங்கள் எல்லாம் பெறப்பட்டிருக்கிறது – அதேவேளையில், அரசு எதையெல்லாம் குறித்து கவனம் செலுத்தவேண்டும் – எங்கெல்லாம் அவர்களுடைய பார்வை இன்னும் கூறாக இருக்கவேண்டும் என்பதை நாங்கள் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

Related Stories