தமிழ்நாடு

ஒரே தவணையில் ரூ.5 ஆயிரம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை… முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்க திரண்ட பெண்கள்!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை நேற்று (பிப்ரவரி 13) ரூ.5,000, திராவிட மாடல் 2.0 ஆட்சியில் உரிமைத்தொகை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்ததற்கு முதலமைச்சருக்கு திரளான பெண்கள் நன்றி தெரிவித்தனர்.

ஒரே தவணையில் ரூ.5 ஆயிரம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை… முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்க திரண்ட பெண்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையாக நேற்று 5 ஆயிரம் ரூபாய் வழங்கியதற்காகவும், திராவிட மாடல் 2.0 ஆட்சிக் காலத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தமைக்காகவும் பெருந்திரளான பெண்கள் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

திருப்பத்தூரில் ரூ. 15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும்
மாவட்ட விளையாட்டு வளாகத்தின் கட்டுமானப் பணிகளை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (14.02.2026) திருப்பத்தூரில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை, சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு வருகை தந்த போது, பெருந்திரளான பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையில் நேற்று 5 ஆயிரம் ரூபாய் வழங்கியதற்காக தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தெரிவித்துக் கொண்டனர்.   

பின்னர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஜோலார்பேட்டையிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில், தாமலேரிமுத்தூரைச் சேர்ந்த திருமதி மேகலா அவர்களது வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருடன் பேசினார். அப்போது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற்று வருவது குறித்தும், தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திருமதி மேகலா அவர்களிடம் கேட்டபோது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்தே தான் உரிமைத் தொகை பெற்றுவருவதாகவும், இத்தொகையை குழந்தைகளின் பள்ளிச் செலவுகளுக்கு உபயோகப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

ஒரே தவணையில் ரூ.5 ஆயிரம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை… முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்க திரண்ட பெண்கள்!

மேலும், கல்லூரியில் படித்து வரும் தனது இரண்டு மகன்கள் “தமிழ்ப் புதல்வன்” திட்டம் மற்றும் தமிழ்நாடு அரசு மாணவர்களுக்காக வழங்கிவரும் மடிக்கணினி திட்டத்தில் பயன்பெற்று உள்ளதாகவும் தெரிவித்தார். அப்போது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திருமதி மேகலா அவர்களின் மகளிடம் என்ன படிக்கிறார் என்று கேட்டு, நன்றாக படித்து வாழ்வில் வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்தினார்.  

திருமதி மேகலா அவர்கள், தமிழ்நாடு அரசு மக்களின் நல்வாழ்விற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதற்கும், நேற்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகையில் 5 ஆயிரம் ரூபாய் வழங்கியதற்காகவும் தனது நெஞ்சார்ந்த நன்றியினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தெரிவித்துக் கொண்டார்.   

ஒரே தவணையில் ரூ.5 ஆயிரம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை… முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்க திரண்ட பெண்கள்!

அதனைத் தொடர்ந்து, ஜோலார்பேட்டையிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை, பெருந்திரளான பெண்கள் சந்தித்து, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறும் மகளிருக்கு 5 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதற்காகவும், திராவிட மாடல் 2.0 ஆட்சிக் காலத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தமைக்காகவும் இனிப்புகளை வழங்கி நன்றி தெரிவித்துக் கொண்டனர்.  

பின்னர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திருப்பத்தூரில் 10 ஏக்கர் பரப்பளவில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கால்பந்து மைதானம், கையுந்துபந்து மைதானம், கபாடி மைதானம், கூடைப்பந்து மைதானம், நீச்சல் குளம், இறகுபந்து மைதானம், விளையாட்டு வீரர்கள் தங்குமிடம், பார்வையாளர் மாடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டு வரும் திறந்தவெளி மற்றும் உள்விளையாட்டரங்கம் உள்ளடக்கிய மாவட்ட விளையாட்டு வளாகத்தின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 

இந்த நிகழ்வின்போது, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, சட்டப்பேரவை துணைத் தலைவர் திரு.கு.பிச்சாண்டி, நாடாளுமன்ற உறுப்பினர் திரு. எஸ். ஜெகத்ரட்சகன், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. க. சிவசௌந்திரவல்லி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.  

banner

Related Stories

Related Stories