தமிழ்நாடு

நிதி ஒதுக்காமல் ஏமாற்றும் பிரதமர் மோடி : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்தது தமிழ்நாடு!

ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நிதி ஒதுக்காமல் ஏமாற்றும் பிரதமர் மோடி : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்தது தமிழ்நாடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு புதிய திட்டத்தையும், நிதியையும் ஒதுக்கீடு செய்யதாத பா.ஜ.க அரசையும் அதற்கு துணை போகும் அடிமை அ.தி.மு.கவையும் கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைவர்கள் பேசியது வருமாறு:-

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை:-

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் ஆட்டம் எதுவும் பலிக்காது. அங்கு மக்கள் செல்வாக்கு மிக்க முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறார் என்று தெரிந்ததால்தான், பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு எந்தவொரு புதிய திட்டத்தையோ அல்லது உரிய நிதியையோ வழங்காமல் வஞ்சித்து வருகிறார். தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிதியைத் திட்டமிட்டு பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்குத் திருப்பி விடுகிறார்.

நாட்டிலேயே பிரதமர் மோடி, இரண்டு பேரைப் பார்த்துதான் பயப்படுகிறார். ஒருவர் நாடாளுமன்றத்தில் கர்ஜிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மற்றொருவர் தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சியை நடத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அ.தி.மு.க ஆட்சியில் தமிழ்நாட்டை எடப்பாடி பழனிசாமி எப்படி பா.ஜ.க-விடம் அடமானம் வைத்தாரோ, அதேபோலத்தான் இன்று நமது நாட்டை அமெரிக்காவிடம் அடமானம் வைத்துவிட்டார் பிரதமர் மோடி.

CPM மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்:-

’ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு’ என்ற வகையில்தான் ஒன்றிய அரசின் பட்ஜெட் உள்ளது. VB-G RAM G திட்டத்தில் தமிழ்நாட்டை பா.ஜ.க.வும், அடிமை அ.தி.மு.க.வும் வஞ்சித்து வருகிறது.

மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி, 100 நாள் வேலைத் திட்டத்தையே சிதைத்திருக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசின் VB-G RAM G திட்டத்தை எதிர்த்துப் போராடாமல், பெயரளவில் வினோத ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறார் எடப்பாடி பழனிசாமி. இந்த ஆர்ப்பாட்டம் நடப்பதன் ஒரே காரணம், எங்கே தனது வீட்டிற்கு IT அல்லது ED ரெய்டு வந்து விடுமோ என்ற பயம்தான்.

CPI மாநில செயற்குழு உறுப்பினர் வஹிதா நிஜாம்:-

பிரதமர் மோடியை '56 இன்ச்' என்று பெருமையாகப் பா.ஜ.கவினர் சொன்னார்கள். ஆனால், இன்று அந்த '56 இன்ச்' அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் அடிபணிந்து அடிமையாக இருக்கிறது.

நிதி ஒதுக்காமல் ஏமாற்றும் பிரதமர் மோடி : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்தது தமிழ்நாடு!

வி.சி.க. துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு:-

நமது போராட்டம் தமிழ்நாட்டிற்கான போராட்டம். மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவின் வாரிசுகள் இன்று நமக்கு எதிராகக் களத்தில் நிற்கிறார்கள். எந்தத் திட்டத்திலும் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காமல் வஞ்சித்து வருகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

தமிழ்நாட்டிற்கு எந்தத் திட்டத்தையும் நிதியையும் வழங்காத பிரதமரைப் பார்த்து 'மோடி அங்கிள்' என்று சொல்லும் தைரியம் விஜய்க்கு இருக்கிறதா?

மயிலை த.வேலு எம்.எல்.ஏ :-

மாநில உரிமை, மொழி என எதற்குத் தீங்கு வந்தாலும், இந்தியாவிலேயே அதை எதிர்க்கும் முதல் குரலாக இருப்பது நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் குரல்தான். இதற்கு உதாரணமாகத் திகழ்வதுதான் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம்.

banner

Related Stories

Related Stories