தமிழ்நாடு

சென்னையில் 5 வழித்தடங்களில் ‘பிங்க் பேருந்துகள்’ சேவை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

சென்னை வர்த்தக மைய வளாகத்தில் மகளிர் மட்டும் கட்டணமில்லா பயணம் செய்யும் பிங்க் பேருந்துகள் (PINK BUS) இயக்கத்தை, இன்று (27.01.2026) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னையில் 5 வழித்தடங்களில் ‘பிங்க் பேருந்துகள்’ சேவை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று (27.01.2026), சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில், பிரத்யேக மகளிர் மட்டும் கட்டணமில்லா பயணம் செய்யும் பிங்க் பேருந்துகள் (PINK BUS) இயக்கத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், மகளிர் விடியல் பயணம் திட்டம் (கட்டணமில்லா பேருந்து) கடந்த மே 2021 இல், தொடங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று, கீழ்க்கண்ட 5 வழித்தடங்களில் ஒவ்வொரு வழித்தடத்திலும் 2 பேருந்துகள் என மொத்தம் 10 பிரத்யேக மகளிர் மட்டும் பயணம் செய்யும் பிங்க் பேருந்துகளின் (PINK BUS) இயக்கத்தினை முதல் கட்டமாக தொடங்கி வைத்தார்கள்.

மேலும், இந்த பேருந்துகளின் நடத்துநர்கள் பெண்கள் ஆவார்கள். இவர்களுக்கு என சிறப்பு சீருடை இளஞ்சிவப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் 5 வழித்தடங்களில் ‘பிங்க் பேருந்துகள்’ சேவை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

இந்த மகளிர் விடியல் பயண சாதாரண பேருந்துகள் சென்னை மாநகரில் பள்ளி /கல்லூரி நிறுவனங்களுக்கு மற்றும் பணியிடங்களுக்கு சென்று வருவதற்கு OTOOT பிரத்யேகமான பெண்கள் சிறப்பு பேருந்துகள் ஆகும். இந்த சேவை பெண்களின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, பெண் பயணிகள், கல்லூரி மாணவிகள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு என பிரத்யேக மகளிர் சிறப்பு பேருந்துகள் ஆகும்.

சென்னையில் தினசரி மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் சீராக அதிகரித்துள்ளது. 2021-2022 ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு சுமார் 28.70 லட்சம் பயணிகளிலிருந்து 2025-2026 ஆம் ஆண்டில் (டிசம்பர் 2025 வரை) 33.72 லட்சமாக உயர்ந்துள்ளது. பொதுப் போக்குவரத்து பயன்பாட்டில் படிப்படியான முன்னேற்றம் மாநகர் போக்குவரத்துக் கழகம் அடைந்து வருகிறது.

குறிப்பாக பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் (விடியல் பயணம் திட்டம்) பெண் பயணிகளின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தியுள்ளது. எடுத்துக்காட்டாக, இந்த கட்டணமில்லா சேவைகளில் பயணிக்கும் பெண்களின் சதவீதம் சுமார் 40% லிருந்து 61% ஆக வியக்கத்தகு முறையில் அதிகரித்துள்ளதாகவும், சில வழித்தடங்களில் சராசரியாக 63% பெண் பயணிகளாக இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

விரைவான நகரமயமாக்கல் மற்றும் அதிகரித்து வரும் பொருளாதார நடவடிக்கைகளால், பயணத் தேவை அதிகரித்துள்ளது, குறிப்பாக வேலை, கல்வி மற்றும் அன்றாடத் தேவைகளுக்கு மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளை நம்பியிருக்கும் பெண் பயணிகளிடையே பேருந்துகளின் தேவை முன்னெப்போதையும் விட அதிகரித்து வருகிறது.

பெண்களுக்கான பிரத்யேக மகளிர் பேருந்து சேவை செயல்படுத்துவதால், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான நடத்தைகளுக்கு ஆளாகுவதை தவிர்ப்பதன் மூலம் பாதுகாப்பான மற்றும் வசதியான பயண அனுபவத்தை உறுதி செய்கிறது.

விடியல் பயணத்திட்டத்தின் காரணமாக பெண்கள் ஒவ்வொரு மாதமும் சராசரியாக ரூ.880/- வரை பயணச் செலவுகளில் சேமிப்பதாக வெளிப்படுத்துகின்றன.

குறைந்த வருமானம் உள்ள பல பெண்களுக்கு, இந்த சேவையினால் தங்களின் வருமானத்தில் சேமிப்பு அதிகரித்துள்ளது.

இச்சேமிப்பு தங்கள் அத்தியாவசிய தேவைகளான கல்வி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து போன்றவற்றிற்கு பெண்களுக்கு உதவுகிறது.

banner

Related Stories

Related Stories