தமிழ்நாடு

கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் 23 தங்க பதக்கங்கள் பெற்ற மாணவர் : பாராட்டிய அமைச்சர் இராஜேந்திரன்!

கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் பயின்று 23 தங்க பதக்கங்கள் பெற்ற மாணவருக்கு அமைச்சர் இராஜேந்திரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் 23 தங்க பதக்கங்கள் பெற்ற மாணவர் : பாராட்டிய அமைச்சர் இராஜேந்திரன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி வட்டம், கோபாலபுரத்தில் அமைந்துள்ள சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கணக்குப்பிரிவில் எழுத்தராக பணியாற்றி வரும் கே.கே.இளங்கோ அவர்களின் மகனாகிய இ.எல்.அருணேஸ்வரன் அவர்கள், இளங்கலை கால்நடை மருத்துவ படிப்பை, நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரியில் 2018-2024 கல்வியாண்டில் பயின்றார்.

மேலும், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின் மூலம் 24.01.2026 அன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 23 தங்க பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, எளிய பின்னணியில் இருந்து படித்து சாதனை படைத்த இ.எல்.அருணேஸ்வரன் அவர்களை பாராட்டும் வகையில் அமைச்சர் இரா.இராஜேந்திரன் அவர்கள் இன்றைய தினம் துறையின் சார்பாக அழைத்து பாராட்டுதலையும், வாழ்த்துகளையும் தெரிவித்து, அரூர் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மூலம் ரூ.1 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கி ஊக்கப்படுத்தினார்.

banner

Related Stories

Related Stories