
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை, அதிமுக முன்னாள் அமைச்சரும், ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் சந்தித்தார். அப்போது, முதலமைச்சர் முன்னிலையில் வைத்திலிங்கம் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.
இந்நிகழ்வின் போது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, கோவி.செழியன், நாடாளுமன்ற உறுப்பினர்fள் தயாநிதிமாறன், முரசொலி, சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தில் பாலாஜி, துரை சந்திரசேகரன், பூண்டி கலைவாணன், அசோக் குமார், திமுக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மக்களின் மனதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைந்துள்ளதாகக் கூறினார். தாய்க்கழகமான தி.மு.க-வில் இணைந்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்
முன்னதாக தனது ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை வைத்திலிங்கம் ராஜினாமா செய்தார். கடிதத்தை சபாநாயகர் அப்பாவுவை இன்று காலை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வைத்திலிங்கம் அளித்தார்.
அ.தி.மு.க-வில் இருந்த மனோஜ் பாண்டியன், மைத்ரேயன், மருது அழகுராஜ், அன்வர் ராஜா, சுப்புரத்தினம் ஆகியோர் தி.மு.க-வில் இணைந்த நிலையில் தற்போது வைத்திலிங்கமும் தி.மு.க-வில் இணைந்துள்ளார். அடுத்தடுத்து அ.தி.மு.க நிர்வாகிகள், தி.மு.கவில் அணைந்து வருவதால் எடப்பாடி பழனிசாமி கலக்கத்தில் இருக்கிறார்.






