தமிழ்நாடு

“2026 தேர்தலிலும் திராவிட மாடல் ஆட்சி தொடரும்” : கனிமொழி எம்.பி உறுதி!

2026 தேர்தலிலும் திராவிட மாடல் ஆட்சி தொடரும் என கனிமொழி எம்.பி உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

“2026 தேர்தலிலும் திராவிட மாடல் ஆட்சி தொடரும்” :  கனிமொழி எம்.பி உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை தெற்கு மாவட்ட, கழக மகளிர் அணி சார்பில் 3000 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற கழக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி, 3000 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார்.

பின்னர் பேசிய கனிமொழி எம்.பி,"தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் பொங்கல் கொண்டாடும் வகையில் ரூ.3000 பொங்கல் பரிசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். அதேபோல் நமது மாணவர்கள் கல்வி தரத்தில் சிறந்து விளங்கும் வகையில் மடிக்கணினிகளை திராவிட மாடல் அரசு வழங்கியுள்ளது. மாணவர்களின் கல்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணையாக இருந்து வருகிறார்.

திராவிட மாடல் ஆட்சி என்றால் பெண்களுக்கான ஆட்சி என்ற வகையில் சிறப்பாக நாங்கள் செயல்பட்டு வருகிறோம். விடியல் பயணம், புதுமைப் பெண் என பல்வேறு திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. பெண்களின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு திட்டங்களையும் பார்த்து பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.

பொங்கல் விழா முடிந்ததும் தி.மு.க தேர்தல் அறிக்கை குழுவினர் மக்களை நேரடியாக களத்திற்சு சென்று சந்திக்க இருக்கிறார்கள். 2026 தேர்தலிலும் திராவிட மாடல் ஆட்சியில் 2.0 சாதனைகள் தொடரும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories