தமிழ்நாடு

‘நான் இந்தியன்’ : சீனர் என நினைத்து திரிபுரா இளைஞர் அடித்துக் கொலை - அதிர்ச்சி சம்பவம்!

உத்தரகாண்டில் சீனர் என நினைத்து, பழங்குடியின இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘நான் இந்தியன்’ : சீனர் என நினைத்து திரிபுரா இளைஞர் அடித்துக் கொலை - அதிர்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர் அஞ்சல் சக்மா. பழங்குடியின இளைஞரனா இவர் டேராடூனில் உள்ள பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்து வந்தார். அதேபோல் இவரது சகோதரர் மைக்கேல் சக்மா என்பவரும் உத்தராஞ்சல் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.

இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் கடந்த டிச.9 ஆம் தேதி அன்று செலகோய் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இவர்களை வழிமறித்த ஒரு கும்பல், நீங்கள் சீனர்கள் என கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

அப்போது, இருவரும் நாங்கள் சீனர்கள் அல்ல இந்தியர்கள்தான் என கூறி தங்களது ஆவணங்களையும் காட்ட முயன்றனர். ஆனால் அந்த கும்பல் அவர்களை கடுமையாக தாக்கியது. மேலும் கத்தியால் குத்தியுள்ளனர்.பிறகு அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இதனைத் தொடர்ந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அஞ்சல் சக்மா உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து அவ்னிஷ் நேகி, சவுர்யா ராஜ்புத், சூரஜ் குவால், சுமித், ஆயுஷ் பரோனி ஆகிய 5 பேரை கைது செய்துள்ளனர்.

ஒன்றிய பா.ஜ.க அரசும், அக்கட்சி தலைவர்களும் எவ்விதமான ஆதாரங்களும் இல்லாமல் சீனாவை எதிரிகள் போல் சித்தரித்து பேசி இளைஞர்கள் மனதில் வெறுப்பை விதைப்பதே இதுபோன்ற துயரங்களுக்கு வழிவகுக்கிறது.

banner

Related Stories

Related Stories