தமிழ்நாடு

இவர்கள் சித்தாத்தம் இருக்கும் வரைம் திமுகவை தொட்டுக் கூட பார்க்க முடியாது : திவ்யா சத்யராஜ் அதிரடி பேச்சு

தமிழ்நாட்டிற்கு நீதியும் இல்லை; நிதியும் இல்லை என சொல்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.

இவர்கள் சித்தாத்தம் இருக்கும் வரைம் திமுகவை தொட்டுக் கூட பார்க்க முடியாது : திவ்யா சத்யராஜ் அதிரடி பேச்சு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் துணை முதலமைச்சரும் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ’தயாள குணம் அழகானது தமிழர் வாழ்வே கலையானது’ என்னும் தலைப்பில் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் பங்கேற்று பேசிய திவ்யா சத்யராஜ்” புது கட்சி தொடங்கியவர்களை போல பேப்பரில் எழுதி கத்தி பேச வேண்டும் என்று அவசியம் நமக்கு இல்லை. நாம் உண்மையை பேசினாலே போதும். நான் உடைந்த சமயங்களில் எனக்கு ஆறுதலாக இருந்தது முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் வரிகள் தான்.

ஆளுங்க கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால் திமிராக செயல்படுவதாக என்மீது சமூகவலைதளத்தில் சிலர் அவதூறு குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்று சொல்கிறேன், பொறுப்பு வழங்கியதால் எனக்கு திமிர் கிடையாது. ஆனால் நான் தி.மு.க-வின் உறுப்பினர் என்ற திமிர் எனக்கு இருக்கிறது.

பா.ஜ.கவுக்கு இரண்டே இரண்டு விஷயம் தான் முக்கியம். ஒன்று இந்து, மற்றொன்று இந்தி. தமிழ்நாட்டிற்கு நீதியும் இல்லை நிதியும் இல்லை என சொல்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.

அதேநேரம் பா.ஜ.கவின் எல்லாவிதமான தாக்குதல்களையும் எதிர்கொண்டு, தொழில்துறை, மருத்துவம், கல்வி, பெண் வளர்ச்சி, குழந்தைகள் பாதுகாப்பு என அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மேடையில் இருந்து பாட்டு பாடுகிறவர்கள் எல்லாம் தலைவர் கிடையாது. மக்களுக்காக பாடுபடுகிறவர்கள் தான் தலைவர்கள். திரையில் நடனம் ஆடுபவர் தலைவர் கிடையாது ,தரையில் தளம் காண்பவர் தான் தலைவர். அப்படி எப்போதும் மக்களுக்காக களத்தில் இருந்து செயல்பட்டு வருகிறார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டான்.

தி.மு.க-வை அழித்து விடுவோம் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஒன்று தெரியவில்லை. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகிய மூன்று தூண்கள் இருக்கும் வரை தி.மு.க-வை யாராலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories