
விழுப்புரம் சட்டமன்ற தொகுதி தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் கழக இளைஞரணி செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் "ஒன்றிய பா.ஜ.க அரசின் சதித்திட்டங்களை முறியடித்து, இந்தியாவிலேயே ஒரு சிறப்பான ஆட்சியை நடத்தி அனைத்து மாநிலங்களுக்கு வழிகாட்டி வருகிறார் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முதுகெலும்பு இல்லாத அடிமை எடப்பாடி பழனிச்சாமி, அமித்ஷாவுக்கு எதிராக மூச்சுக்கூட விட பயப்படுகிறார். அ.தி.மு.க ஒரு கட்சி அல்ல. அது பா.ஜ.க-வின் கிளை அமைப்பாக செயல்பட்டு வருகிறது.
அ.தி.மு.க-வின் தலைமை டெல்லியில் தான் உள்ளது. அதன் தலைவர் அமித்ஷா. உலகத்திலே சொந்த கட்சி பிரச்சனையை தீர்க்க அடுத்த கட்சி தலைமையிடம் பஞ்சாயத்து பேசும் ஒரே இயக்கம் அ.தி.மு.க தான்.
Facebook இல் Fake ID இருக்கும் அது போல திராவிடம் என்பதை கட்சி பெயரில் வைத்திருக்கும் இயக்கம் அ.தி.மு.க. பா.ஜ.க-வின் Fake ID தான் அ.தி.மு.க. அ.தி.மு.க-வில் அண்ணாவும் இல்லை, எம்.ஜி.ஆரும் இல்லை, திராவிடமும் இல்லை. ஏன் அ.தி.மு.க-வில் தொண்டர்களே இல்லை.
மீண்டும் அடிமை அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டையே பா.ஜ.க-விடம் விற்று விடுவார்கள். மத கலவரத்தை செய்து இங்கு ஆட்சியை பிடிக்கப் பார்க்கிறது பா.ஜ.க. தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் உங்கள் எண்ணம் ஈடேறாது. இங்கு நடப்பது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி” என தெரிவித்துள்ளார்.






