
அமைதிப்பூங்காவாகத் திகழும் தமிழ்நாட்டில் கல்வியிலும், மருத்துவத்திலும், சமூகநீதியிலும், பெண்ணுரிமையிலும் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு எதிராகப் பலவிதத் தடைகளை ஆர்.எஸ்.எஸ், ஒன்றிய பா.ஜ.க ஆட்சி, இந்துத்துவா அமைப்புகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள்.
தற்போது, திருப்பரங்குன்றத்தில் மதக் கலவரத்தை ஏற்படுத்தும் விதமாகப் வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு துணை போகும் வகையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு அமைந்துள்ளது. இதனால் திருப்பரங்குன்றத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.அப்பகுதியில் பதற்றத்தை தனித்து அமைதியை தமிழ்நாடு அரசு நிலைநாட்டியுள்ளது
இருந்தும் பா.ஜ.கவும் இந்துத்துவா கும்பலும் பதற்றத்தையே ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். நேற்று இரவு கூட பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் மலை ஏற முயற்சித்தனர். 144 தடையை மீறி செல்ல முயன்றவர்களை போலிசார் கைது செய்தனர்.
மேலும், 100 ஆண்டுகளாக நடந்து வரும் தீபம் ஏற்றப்படும் இடத்திலேயே, வழக்கம்போல தீபம் ஏற்றப்பட்டது. உண்மை இப்படி இருக்க, இதற்கு மாறான தவறான செய்தியை தினத்தந்தி நாளேடு வெளியிட்டுள்ளது. இதற்கு அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”திருப்பரங்குன்றம் முருகர் கோவில் இருக்கும் மலையில் காலங்காலமாக தீபம் ஏற்றப்படும் அதே இடத்தில் கடந்த 3 ஆம் தேதியன்று தீபம் ஏற்றப்பட்டது. ஆனால் ‘தீபம் ஏற்றவிடவில்லை’ என்று சங்பரிவார் அமைப்புகளின் பொய்யை தினத்தந்தி போன்ற பொறுப்புமிக்க ஊடகம் தலைப்புச் செய்தியாக்கியிருப்பது வருத்தத்திற்குரியது.
மத்தியப்படையை வைத்து தீபம் ஏற்ற வேண்டும் என மாநிலத்தின் உரிமைகளையே கேள்விக்குள்ளாக்கும் போது ஊடகங்கள் அமைதிகாப்பது முறையா? அமைதிமிகு தமிழ்நாட்டில் கலவர எண்ணத்தோடு ஒரு கும்பல் முயற்சிப்பதைத்தான் தமிழ்நாடு அரசு அனுமதிக்கவில்லை என்பதை திரிப்பது சரியா? பக்தி நோக்கம் இல்லாமல் கலவர நோக்கம் கொண்ட இந்த செயலை அனுமதிக்க முடியாது என்பதே அரசின் நிலைப்பாடு." என தெரிவித்துள்ளார்.






