
அமைதிப்பூங்காவாகத் திகழும் தமிழ்நாட்டில் கல்வியிலும், மருத்துவத்திலும், சமூகநீதியிலும், பெண்ணுரிமையிலும் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு எதிராகப் பலவிதத் தடைகளை ஆர்.எஸ்.எஸ், ஒன்றிய பா.ஜ.க ஆட்சி, இந்துத்துவா அமைப்புகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள்.
தற்போது, திருப்பரங்குன்றத்தில் மதக் கலவரத்தை ஏற்படுத்தும் விதமாகப் வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்கு துணை போகும் வகையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு அமைந்துள்ளது. இதனால் திருப்பரங்குன்றத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.அப்பகுதியில் பதற்றத்தை தனித்து அமைதியை தமிழ்நாடு அரசு நிலைநாட்டியுள்ளது.
இந்த முயற்சிக்காக தமிழ்நாடு அரசை பாராட்ட மனம் இல்லாமல், வன்முறையை ஏற்படுத்த நினைக்கும் கழவர்களுக்கு துணைபோகும் வகையில் எடப்பாடி பழனிசாமி அரசின் நடவடிக்கைமீது விமர்சனம் வைத்துள்ளார்.
இந்த விமர்சனத்திற்கு அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். அதில்,பா.ஜ.க- RSS-ன் கைக்கூலியாக மாறி அண்ணாதிமுகவை அமித்ஷாதிமுக-வாக மாற்றிய அடிமை பழனிசாமி தமிழ்நாட்டு மக்களின் நலனைப் பற்றி துளியும் அக்கறையின்றி அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில் கலவரம் செய்ய துடிக்கும் கயவர்களுக்குத் துணைபோய் நிற்பது வெட்கக்கேடு.
மதப்பிரிவினைவாத சக்திகளும் , அடிமைக் கைக்கூலிகளும் எவ்வளவு முயன்றாலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கும் வரை தமிழ்நாட்டின் அமைதியைச் சீர்குலைக்க முடியாது. மதங்களைக் கடந்து உறவுகளாய் வாழ்ந்துவரும் தமிழ்நாட்டு மக்களிடம் உங்களின் தகிடுதத்தம் எதுவும் எடுபடாது. எதிரிகளுக்கும் , துரோகிகளுக்கும் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என தெரிவித்துள்ளார்.






