தமிழ்நாடு

மோசமான தேசிய நெடுஞ்சாலைகளால் அதிகரிக்கும் விபத்துகள் : நாடாளுமன்றத்தில் திமுக MP-க்கள் குற்றச்சாட்டு!

விபத்துகளை அதிகப்படுத்தும் பராமரிப்பு இல்லாத தேசிய நெடுஞ்சாலைகள் என நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மோசமான தேசிய நெடுஞ்சாலைகளால் அதிகரிக்கும் விபத்துகள் : நாடாளுமன்றத்தில் திமுக MP-க்கள் குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.இதில் நாட்டில் 2024ஆம் ஆண்டில் மட்டும் சாலை விபத்துகளால் 1,80,000 உயிர்கள் இழந்ததை குறிப்பிட்டு நாடாளுமன்றத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

அதில்,சாலை விபத்து இறப்புகளை குறைக்கவும் ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) இலக்கை மீறாமலும் இருக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுடன் எந்த அளவுகோளில் இறப்பு விகிதங்கள் ஒப்பிடப்படுகிறது?

வடிவமைப்பு குறைபாடுகள் கண்டறிந்து சரிசெய்யவும் அறிவியல் சாலைப் பாதுகாப்பு தணிக்கைகளை மேற்கொள்ளவும் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களுடன் பாதுகாப்பான சாலைகளைப் பொறியியல் ரீதியாக வழங்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளின் விவரங்கள் என்ன? கடந்த மூன்று ஆண்டுகளில் சாலைப் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட மொத்த நிதி மற்றும் அவற்றின் செலவு விவரங்கள் குறித்தும் ஆ.இராசா கேட்டுள்ளார்.

மோசமான நிலையில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசுக்கு கண்டனம்.

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை-45 (NH-45), தேசிய நெடுஞ்சாலை-32 (NH-32) மற்றும் தேசிய நெடுஞ்சாலை-44 (NH-44) உள்ளிட்ட பல தேசிய நெடுஞ்சாலைகளின் பராமரிப்பு மிக மோசமாக உள்ளதை குறிப்பிட்டு திமுக வட சென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் தற்போது பழுது பார்க்கும் வேலைகள் நடைபெறும் அல்லது பராமரிப்பு நிலுவையில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் எவ்வளவு? கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட நிதி எவ்வளவு? இந்த நெடுஞ்சாலைகளின் ஆய்வு மற்றும் தர தணிக்கைகளை அதிகரிக்க அரசாங்கத்திடம் உள்ள திட்டங்கள் என்ன?

காலக்கெடுவிற்குள் பராமரிப்பு, தரமான பொருட்களின் பயன்பாடு மற்றும் ஒப்பந்ததாரர்களின் பொறுப்புணர்வை உறுதி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்றும் அவர் கேட்டுள்ளார்.

மோசமான தேசிய நெடுஞ்சாலைகளால் அதிகரிக்கும் விபத்துகள் : நாடாளுமன்றத்தில் திமுக MP-க்கள் குற்றச்சாட்டு!

விபத்துகளை அதிகப்படுத்தும் பராமரிப்பு இல்லாத தேசிய நெடுஞ்சாலைகள்!

கடந்த ஐந்து ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாடு மற்றும் பராமரிப்புக்கான பட்ஜெட் ஒதுக்கீடுகள் மற்றும் செலவினங்களின் விவரங்கள் கேட்டு திமுக பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் கே. ஈஸ்வரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதில், இந்தக் காலகட்டத்தில் நெடுஞ்சாலை விரிவாக்கம், மேம்படுத்தல் மற்றும் சாலைப் பாதுகாப்புக்காக அரசாங்கம் வகுத்திருக்கும் சிறப்புத் திட்டங்கள் என்ன? கடந்த ஐந்து ஆண்டுகளில், மாநில வாரியாக தேசிய நெடுஞ்சாலைகளில் பதிவான விபத்துகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை மற்றும் அடையாளம் காணப்பட்டுள்ள அதன் முக்கிய காரணங்கள் என்ன?

மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்புகள் (ATMS) நிறுவப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளின் எண்ணிக்கை மற்றும் இடம் குறித்த விவரங்கள் அதற்கான மொத்த செலவுகளூடன் சேர்த்து எவ்வளவு? அனைத்து தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளுக்கும் ATMS கவரேஜை விரிவுபடுத்தும் திட்டம் உள்ளதா, அப்படியானால், அதன் விவரங்கள் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories