
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (26.11.2025) ஈரோட்டில் நடைபெற்ற அரசு விழாவில், 235 கோடியே 73 இலட்சம் ரூபாய் செலவிலான 790 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 91 கோடியே 09 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 23 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 1,84,491 பயனாளிகளுக்கு 278 கோடியே 62 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஈரோடு மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற திட்டப்பணிகளின் விவரங்கள்
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், சோலார் பகுதியில் 74 கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம், மோளகவுண்டம்பாளையம் நடுநிலைப்பள்ளி, இரயில்வே காலனி மேல்நிலைப் பள்ளிகளில் 1 கோடியே 13 இலட்சம் ரூபாய் செலவில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளில் 3 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவில் 3 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்,
6 நகர்ப்புற துணை சுகாதார நிலையங்கள், 36 இலட்சம் ரூபாய் செலவில் ஒன்பது மீட்டர் உயரம் கொண்ட சிறிய கோபுர மின் விளக்குகள், 21 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் சாமுண்டி நகர் பகுதியில் நியாயவிலைக் கடை மற்றும் இரயில்வே காலனி அரசு மேல்நிலைப்பள்ளிக்கான மேசை மற்றும் நாற்காலிகள்;
சத்தியமங்கலம் நகராட்சியில் 3 கோடியே 3 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட வாரச்சந்தை, புன்செய்புளியம்பட்டி நகராட்சியில் 3 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் புதிய வணிக வளாகம் மற்றும் 52 கோடியே 7 இலட்சம் ரூபாய் செலவில் குடிநீர் திட்ட அபிவிருத்திப் பணிகள், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி-சீலம்பட்டியில் 1 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம், 6 கோடியே 57 இலட்சம் ரூபாய் செலவில் அரச்சலூர், அத்தாணி, வாணிப்புத்தூர், எலத்தூர், நசியனூர் ஆகிய பேரூராட்சிகளில் புதிய பேரூராட்சி அலுவலகக் கட்டடங்கள் மற்றும் காஞ்சிக் கோவில் பேரூராட்சியில் வணிக வளாகம், கொளப்பலூர், அத்தாணி, ஒலகடம், மொடக்குறிச்சி ஆகிய பேரூராட்சிகளில் 6 கோடியே 71 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட வாரச்சந்தைகள்;
லக்கம்பட்டி, அத்தாணி ஆகிய பேரூராட்சிகளில் 1 கோடி ரூபாய் செலவில் சமுதாயக் கூடங்கள், நம்பியூர், ஆப்பக்கூடல், கொல்லன்கோவில், சிவகிரி ஆகிய பேரூராட்சிகளில் உள்ள பள்ளிகளில் 3 கோடியே 49 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் வகுப்பறைக் கட்டடங்கள், 3 கோடியே 64 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 19 பேரூராட்சிகளில் 9 மீட்டர் உயரம் கொண்ட சிறிய கோபுர மின் விளக்குகள், 3 பேரூராட்சிகளில் 12 மீட்டர் உயரம் கொண்ட உயர் கோபுர மின்விளக்குகள், நியாய விலைக் கடைகள் மற்றும் குடிநீர் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள்;
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், 2 கோடியே 15 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் கூத்தம்பாளையம், எழுநூத்திமங்கலம், அயலூர், மூங்கில்பாளையம் ஆகிய இடங்களில் 4 ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டடங்கள், பவளத்தாம்பாளையம், ஒரிச்சேரி, நல்லூர் ஆகிய இடங்களில் 3 நியாயவிலைக் கடைகள், வாய்ப்பாடி சாணார்பாளையம், நல்லூர், பனையம்பள்ளி ஆகிய இடங்களில் 3 அங்கன்வாடி மையக் கட்டடங்கள், கரட்டுப்பாளையத்தில் 1 கோடியே 3 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் ஜிம்னாஸ்டிக் ஸ்டேடியம், சானிடோரியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 33 இலட்சத்து 18 ஆயிரம் ரூபாய் செலவில் வகுப்பறைக் கட்டடங்கள், கொண்டையம்பாளையம் பள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் 8 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் பயணியர் நிழற்குடை, பவானிசாகர் பேரூராட்சியில் 6 கோடியே 91 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் இலங்கை வாழ் தமிழர்களுக்கான ஒருங்கிணைந்த வீடுகள்,
1 கோடியே 48 இலட்சத்து 74 ஆயிரம் ரூபாய் செலவில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, மகளிர் சுய உதவிக் குழுக்கான பணிக்கொட்டகை மற்றும் சிமெண்ட் கான்கிரீட் சாலையுடன் கூடிய உறிஞ்சுகுழி; 1 கோடியே 1 இலட்சம் ரூபாய் செலவில் தாளவாடியில் வட்டார பொது சுகாதார மையம் மற்றும் காசியூரில் துணை சுகாதார நிலையம், கலிங்கியம், சிறுவலூர், கொண்டையம் பாளையம், தலமலை, அரேபாளையம், கேர்மாளம் ஆகிய கிராம ஊராட்சிகளில் 1 கோடியே 20 இலட்சத்து 72 ஆயிரம் ரூபாய் செலவில் 6 கிராம ஊராட்சி அலுவலகத்துடன் கூடிய பொது சேவை மையக் கட்டடங்கள், மொடக்குறிச்சி வட்டாரம்-நஞ்சை காளமங்கலம், மன்னாதம் பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 7 இலட்சத்து 88 ஆயிரம் ரூபாய் செலவில் புதிய இருப்பறையுடன் கூடிய சமையல் அறை, மொடக்குறிச்சி வட்டாரம் - ஆனந்தம்பாளையம், காகம், புஞ்சை காளமங்கலம், துய்யம்பூந்துறை ஆகிய இடங்களில் 24 இலட்சத்து 39 ஆயிரம் ரூபாய் செலவில் 4 பொது சுகாதார வளாகங்கள்;
69 இலட்சத்து 29 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரிச்சேரிபுதூர், பெரியபுலியூர் ஆகிய இடங்களில் ஊராட்சி மன்றக் கட்டடங்கள் மற்றும் கருந்தேவன்பாளையத்தில் உணவு தானிய சேமிப்புக் கிடங்கு, ஈரோடு மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும் 19 கோடியே 15 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 618 வீடுகள் மற்றும் முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டத்தின் கீழ் 16 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் மறுசீரமைக்கப்பட்ட 7 வீடுகள்;
20 இலட்சம் ரூபாய் செலவில் 46 புதூர் ஊராட்சியில் ஈரோடு புறநகர் சுற்றுசாலை ஆணைக்கல்பாளையம் பூந்துறை ரோடு சந்திப்பு நால் சாலையில் 16 மீட்டர் உயரத்தில் 200 வாட்ஸ் கொண்ட 8 உயர் மின் கோபுர விளக்குகள், 46 புதூர் நால் சாலை சந்திப்பு மற்றும் முத்துக் கவுண்டம்பாளையம் ஊராட்சி – வெள்ளக்கோவில் முத்தூர் சாலை சந்திப்பு நால் சாலை ஆகிய இடங்களில் 12 மீட்டர் உயரத்தில் 200 வாட்ஸ் கொண்ட 6 உயர் மின் கோபுர விளக்குகள், 49 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கண்டிக்காட்டுவலசு, சாமிநாதபுரம், மொடக்குறிச்சி ஆகிய இடங்களில் உள்ள 3 அரசு பள்ளிகளுக்கு மேசைகள் மற்றும் நாற்காலிகள் மற்றும் 21 அரசுப் பள்ளிகளில் அறிவுத் திறன் வகுப்பறைகள்;
வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில், கடம்பூரில் 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் 500 மெ.டன். கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு மற்றும் உலர்களத்துடன் கூடிய ஏல மையம்;
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அந்தியூர் அரசு மருத்துவமனையில் 5 கோடி ரூபாய் செலவில் தரைத் தளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய கட்டடம், ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 8 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள், தாமரைப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 15 இலட்சம் ரூபாய் செலவில் ஓமியோபதி பிரிவுக் கட்டடம், சத்தியமங்கலம் நகராட்சியில் 75 இலட்சம் ரூபாய் செலவில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்;
நெடுஞ்சாலைத் துறை சார்பில், சத்தி-அத்தாணி-பவானி சாலை முதல் தாசரிபாளையம் சாலை வரையில் 7 கோடி ரூபாய் செலவில் உயர்மட்டப் பாலம்; வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில், பவானியில் 2 கோடியே 35 இலட்சம் ரூபாய் செலவில் வணிவரித்துறை அலுவலகக் கட்டடம்;
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில், மொடக்குறிச்சி, ஜெயராமபுரத்தில் மாவீரன் பொல்லான் அவர்களுக்கு 4 கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவில் திருவுருவச்சிலையுடன் கூடிய அரங்கம், ஈரோடு பால்பண்ணை வளாகத்தில் உள்ள பூங்காவில் தமிழ்நாட்டில் வெண்மை புரட்சிக்கு வித்திட்ட பால்வளத் தந்தை எஸ்.கே.பரமசிவன் அய்யா அவர்களுக்கு 50 இலட்சம் ரூபாய் செலவில் திருவுருவச்சிலை;
பள்ளிக் கல்வித் துறை சார்பில், டி.ஜி.புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1 கோடியே 64 இலட்சத்து 92 ஆயிரம் ரூபாய் செலவில் 7 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், கும்மக்காளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 1 கோடியே 64 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாய் செலவில் 6 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் கழிவறைகள், குடிநீர் வசதிகள், மலையப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1 கோடியே 41 இலட்சத்து 36 ஆயிரம் ரூபாய் செலவில் 6 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2 கோடியே 82 இலட்சத்து 72 ஆயிரம் ரூபாய் செலவில் 12 வகுப்பறைக் கட்டடங்கள், கருமாண்டிசெல்லிபாளையத்தில் 50 இலட்சம் ரூபாய் செலவில் புதிய நூலகக் கட்டடம்;
இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில், பண்ணாரி அம்மன் திருக்கோயிலில் 61 இலட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட கருணை இல்லம் என மொத்தம், 235 கோடியே 73 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவிலான 790 முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் திறந்து வைத்தார்.


ஈரோடு மாவட்டத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளின் விவரங்கள்
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், நசியனூர் பேரூராட்சியில் 16 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் திட்ட மேம்பாட்டுப் பணிகள், காஞ்சிக்கோவில் பேரூராட்சியில் 45 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நகர்ப்புற சுகாதார துணை நிலையம், 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொங்கம்பாளையத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் வசதி ஏற்படுத்துதல், செம்பாம்பாளையத்தில் கல்வெட்டுப்பாலம் அமைக்கும் பணிகள், கவுண்டம்பாளையம் பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்துதல்;
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில், ஈரோடு சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம், 1 கோடியே 13 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கூரப்பாளையம், குளவிளக்கு, நிச்சாம்பாளையம், எக்கட்டாம்பாளையம் நல்லபள்ளி, எக்கட்டாம்பாளையம் வெப்பிலி, முருங்கத்தொழுவு, ஓட்டப்பாறை, புஞ்சைபாலத்தொழுவு, வெள்ளிதிருப்பூர் ஆகிய 9 ஊராட்சிகளில் பேருந்து நிழற்குடைகள், வெள்ளிதிருப்பூர், கெட்டிசமுத்திரம் ஆகிய 2 ஊராட்சிகளில் பகுதிநேர நியாயவிலைக் கடைகள், நகலூர் ஊராட்சியில் தகனமேடை மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள், 46 புதூரில் 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்நோக்கு மையக் கட்டடம்;
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில், மரூரில் 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகள்;
நீர்வளத் துறை சார்பில், எண்ணமங்கலத்தில் வழுக்குபாறைபள்ளம் ஓடையில் 1 கோடியே 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள், குண்டேரிப்பள்ளம் அணையின் கால்வாய் கதவுகள் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள்;
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில், அரச்சலூர் ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை மணிமண்டப வளாகத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தீரன் சின்னமலை அவர்களுக்கு வெண்கலச் சிலை அமைக்கும் பணி;
என மொத்தம், 91 கோடியே 08 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 23 புதிய திட்டப் பணிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் அடிக்கல் நாட்டினார்.
ஈரோடு மாவட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விவரங்கள்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 19,500 பயனாளிகளுக்கு பட்டாக்கள்; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 20 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள்; வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 44,305 பயனாளிகளுக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம், பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டம், மானாவாரி மேம்பாட்டுத் திட்டம், நுண்ணீர்பாசனத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் உதவிகள்;
வேளாண்மை பொறியியல் துறை சார்பில 253 பயனாளிகளுக்கு பண்ணை குட்டைகள் அமைத்தல், முதலமைச்சரின் சூரியசக்தி மின்மோட்டார் மற்றும் பழைய மின்மோட்டார்களை மாற்றி மானியத்தில் புதிய மின்மோட்டார்களை வழங்குதல், திறந்தவெளி பாசன கிணறுகளை புனரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் உதவிகள்; தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 96,050 பயனாளிகளுக்கு தேசிய தோட்டக்கலை இயக்கம், தேசிய மூங்கில் இயக்கம், மானாவாரி பகுதி மேம்பாட்டு திட்டம், தேசிய வேளாண் வளாச்சித் திட்டம், மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டம், பனை மேம்பாட்டு இயக்கம், ஊட்டச்சத்து மேலாண்மை இயக்கம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் உதவிகள்;
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 1566 பயனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவித்தொகை, காதொலிக் கருவி, மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர்கள், சிறப்பு சக்கர நாற்காலிகள், மூன்று சக்கர சைக்கிள்கள், பிரெய்லி கைக்கடிகாரங்கள், ஒளிரும் மடக்கு குச்சிகள், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள் போன்ற பல்வேறு உதவிகள்; சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் 120 பயனாளிகளுக்கு திருமண உதவித் திட்டத்தின் கீழ் நிதியுதவி;
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 625 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் மற்றும் முதலமைச்சரின் வீடுகள் கட்டுமானத் திட்டத்தின் கீழ் வீடுகள்; தமிழ்நாடு மாநில மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் 7020 பயனாளிகளுக்கு மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடனுதவி மற்றும் அடையாள அட்டைகள் வழங்குதல்; சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் 449 பயனாளிகளுக்கு புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், கலைஞர் கைவினைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் உதவிகள்;
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 900 பயனாளிகளுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்தொகை, ஊட்டச்சத்து பெட்டகங்கள் மற்றும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் உதவிகள்; தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் 10,100 பயனாளிகளுக்கு தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு, பதிவு பெற்ற பெண் ஓட்டுநர்களுக்கு ஆட்டோ வாங்கிட மானியம், கல்வி மற்றும் திருமண உதவித்தொகை, கண்கண்ணாடி வாங்க நிதியுதவி, ஓய்வூதியம், இயற்கை மரணம் மற்றும் ஈமடச்சடங்கிற்கான நிதியுதவி, விபத்து மரணத்திற்கான நிவாரண நிதியுதவி, நலவாரிய பதிவு அடையாள அட்டைகள் வழங்குதல்;
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் 1974 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள், பயிர்கடன் மற்றும் இதர கடன்கள்; பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 331 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள் வழங்குதல், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மற்றும் கிறித்துவ மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் நலத்திட்ட உதவிகள்;
கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 310 பயனாளிகளுக்கு நாட்டுக்கோழி வளர்ப்பில் ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு மானியத்தில் நாட்டுக் கோழிப் பண்ணைகள் அமைக்கும் திட்டம், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் ஊரக ஏழை கால்நடை விவசாயிகளின் சினையுற்ற கறவைப் பசுக்களுக்கு மானியத்தில் ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் மற்றும் சிறு, குறு விவசாயிகளுக்கு மின்சாரம் மூலம் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் மானியத்தில் வழங்கும் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் உதவிகள், என பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 1,84,491 பயனாளிகளுக்கு 278 கோடியே 62 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.






