தமிழ்நாடு

TNPSC குரூப் 2, 2ஏ-வில் 1270 காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு : முழு விவரம் இதோ!

TNPSCல் குரூப் 2, 2ஏ-வில் 1270 காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 2, 2ஏ-வில் 1270 காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு : முழு விவரம் இதோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2025ஆம் ஆண்டுக்கான TNPSC குரூப் 2, 2ஏ காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை 1,270ஆக உயர்த்தி அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர். வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான 645 காலிப்பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - II (தொகுதி II மற்றும் IIA) பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் 15.07.2025 அன்று வெளியிடப்பட்டது. தற்போது 825 பிற்சேர்க்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கப்பட்ட மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 1270 ஆகும்.

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-II (தொகுதி II மற்றும் தொகுதி IIA பணிகள்) 202ம் ஆண்டு அறிவிக்கையில் ஐந்து நிதி ஆண்டுகளுக்கான காலிப்பணியிடங்களும், 2024-ம் ஆண்டு அறிவிக்கையில் இரண்டு நிதி ஆண்டுகளுக்கான காலிப்பணியிடங்களும், ஆக மொத்தம் எழு நிதியாண்டுகளுக்கு 8784 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதாவது, ஒரு நிதியாண்டிற்கு சராசரியாக 1254 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2025-ம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-II (தொகுதி 11 மற்றும் தொகுதி IIA பணிகள்) மூலம் ஒரு நிதியாண்டிற்கு (2025-26) 1270 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

2022 மற்றும் 2024 ஆண்டிற்கான அறிவிக்கைகளில் ஒரு நிதியாண்டிற்கு நிரப்பப்பட்ட காலிப்பணியிடங்களுடன் ஒப்பிடும்போது, 2025-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிவிக்கையின் மூலம் கூடுதலாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.

மேலும் 2025 ஆம் ஆண்டு அறிவிக்கையில் வெளியிடப்பட்ட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, அரசுத்துறை / நிறுவனங்களிடமிருந்து அதிகரித்து பெறப்படும் பட்சத்தில் கலந்தாய்விற்கு முன்பாக மேலும் அதிகரிக்கப்படும்.

banner

Related Stories

Related Stories