தமிழ்நாடு

"டீசல் பேருந்துகளின் பயன்பாடு குறைக்கப்படாது" : அமைச்சர் சிவசங்கர் உறுதி!

மின்சார பேருந்துகளால் டீசல் பேருந்துகளின் பயன்பாடு குறைக்கப்படாது என அமைச்சர் சிவசங்கர் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

"டீசல் பேருந்துகளின் பயன்பாடு குறைக்கப்படாது" : அமைச்சர் சிவசங்கர் உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை தற்போது மின்சார பேருந்து பணிமனையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு மின்சார பேருந்துகளுக்கு சார்ஜ் அமைக்கும் மின்சார பெட்டிகள் அமைப்பது மற்றும் மின்சார பேருந்துகளை இயக்கும் டிரைவர்களுக்கு பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், ” முதல் கட்டமாக வியாசர்பாடியில் மின்சாரப் பேருந்துக்கான பணிமனையாக மாற்றப்பட்டு 120 பேருந்துகள் இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து பெரும்பாக்கம் மின்சார பேருந்து பணிமனையாக மாற்றப்பட்டது. தற்போது பூந்தமல்லியில் அரசு பணிமனையில் மின்சார பேருந்து நிறுத்த பணிமனையாக மாற்றப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிக்கப்பட்ட பிறகு 130 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

மின்சார பேருந்துகள் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. இன்னும் மூன்று பணிமனைகள் முதற்கட்ட பணிகளில் நடைபெற்று வருகிறது. இதில், விரைவில் பூந்தமல்லி பணிமனை பயன்பாட்டிற்கு வரும். மின்சார பேருந்துகள் டெண்டர் எடுத்துள்ள தனியார் நிறுவனம், டிரைவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது.

மின்சார பேருந்து வாங்கும்போது அதனை பராமரிப்பதற்கான பணியாளர்கள் நம்மிடம் இல்லை. பராமரிப்பதில் சிறு தவறு நடந்தாலும் பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் தான் ஒப்பந்த அடிப்படையில் மின்சார பேருந்து தயாரிக்கின்ற நிறுவனத்தின் சார்பாக பேருந்துகளை பராமரித்து இயக்கப்பட்டு வருகிறது. இதனால் அரசுக்கு பெரும் சுமையை குறைக்கும்.

கால சூழலுக்கு ஏற்ப எதிர்காலத்தில் நடவடிக்கை மாற்றப்படும். தற்போது 3500 பேரை ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு எடுப்பதற்கு நேர்காணல் நடைபெற்று உள்ளது.

மின்சார பேருந்துகள் வந்தாலும், டீசல் பேருந்துகள் குறைக்கப்படாது. புதிதாக 11 ஆயிரம் பேருந்துகள் வாங்குவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார். தற்போது 5 ஆயிரம் புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. மீதமுள்ள பேருந்துகள் படிப்படியாக பயன்பாட்டிற்கு வரும்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories