தமிழ்நாடு

”விடுதலைக்குப் போராடிய தீரர்” : முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

”விடுதலைக்குப் போராடிய தீரர்” : முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 118 ஆவது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரையில், மிக உயரமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்,

பின்னர் பசும்பொன் சென்று, முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”விடுதலைக்குப் போராடிய தீரர் முத்துராமலிங்கத் தேவர் . பசும்பொன்னில் மாபெரும் திருமண மண்டபம் கட்டப்படும்” என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

2007-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர்கலைஞர் ஆட்சிக் காலத்தில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நூற்றாண்டு விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. இதனைத்தொடர்ந்து, இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அவர் வாழ்ந்த இல்லம்புனரமைக்கப்பட்டு நூற்றாண்டு தோரண வாயில் அமைக்கப்பட்டு, புகைப்படக் கண்காட்சிக் கூடம், அணையா விளக்கு, புதிய நூலகக் கட்டடம், முளைப்பாரி மண்டபம், முடி காணிக்கை மண்டபம் அமைக்கப்பட்டன.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், தேவர் சமுதாய மக்கள் பயன்பெறும் வகையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரில் நெல்லை மாவட்டம் மேல்நீலித நல்லூர், இராமநாதபுரம் மாவட்டம் கமுதி, மதுரை மாவட்டம் உசிலம்- பட்டி ஆகிய மூன்று இடங்களில் அரசு கல்லூரிகள், மதுரை மாநகரில் மிக உயரமான பசும்பொன் முத்துராம லிங்கத் தேவர் சிலை முதலியவற்றை அமைத்துத் தேவர் பெருமகனாருக்குப் பெருமைகள் சேர்த்தார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள முத்துராம லிங்கத் தேவர் நினைவிடத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் தமிழ்நாடு அரசின் சார்பில், தெய்வீகத் திருமகனார் உ.முத்துராமலிங்கத் தேவர் அரங்கம் புதிதாக அமைத்து, 28.10.2024 அன்று திறந்து வைத்து சிறப்பித்தார்.

banner

Related Stories

Related Stories