
”சிறுபான்மையினர், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையத்தின் மூலம் ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடவடிக்கையை தி.மு.க எப்போதும் ஏற்றுக்கொள்ளது” என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, ”சிறுபான்மையினர், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையத்தின் மூலம் ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடவடிக்கையை தி.மு.க எப்போதும் ஏற்றுக்கொள்ளது.
ஒருவரை இந்திய குடிமகனா? இல்லையா? என்று தீர்மானிக்கக்கூடிய சக்தியை இவர்களுக்கு யார் கொடுத்தது. ஆதார் வைத்திருப்பவர்கள் இந்திய குடிமகன்கள் தானே. பிறகு ஏன் தேர்தல் ஆணையம் ஆதாரை ஏற்க மறுக்கிறார்கள்.
பீகார், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து, லட்சக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் பண்டிகை காலங்களில் போது அவர்களது சொந்த மாநிலங்களுக்கு சென்று விடுகின்றனர்.
மேலும் ஒரே இடத்தில் இல்லாமல், வெவ்வேறு ஊர்களுக்கும் மாறி மாறி வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களுக்கு தமிழ்நாட்டின் அரசியல் சூழல் தெரியாது. இப்படி இருக்க இவர்களுக்கு இங்கு வாக்களிக்கும் உரிமை கொடுத்தால், அவர்கள் தங்கள் மாநிலத்தின் அரசியல் சூழலுக்கு ஏற்ப வாக்களிப்பார்கள்.
இதனால்தான், அவசர அவசரமாக தேர்தல் ஆணையத்திக் கொண்டு தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை ஒன்றிய பா.ஜ.க அரசு மேற்கொள்கிறது. இதை தமிழ்நாடு முதலமைச்சர் துணிச்சலுடன் எதிர்த்து வருகிறார்.
நயினார் நாகேந்திரன் அவருக்கு கொடுத்த தலைவர் என்ற பதவியை தக்க வைப்பதற்காக தேவையில்லாத கருத்துக்களை கூறிவருகிறார். 2026 தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் இருந்து பா.ஜ.க காணாமல் போகும்.தி.மு.க-வின் 2.0 ஆட்சி மீண்டும் தொடரும்” என தெரிவித்துள்ளார்.






