
திருவாரூர் மாவட்டம், மருதப்பட்டிணம் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார். கல்லூரி படித்து வந்த இவர் கும்பகோணம் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், இவர்களது காதலில் கருத்து வேறுபோடு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரிந்து விடலாம் என பிரவீன் குமாரிடம், இளம் பெண் கூறியுள்ளார்.இதற்கு அவர் நேரில் பேசி முடிவு செய்யலாம் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கும்பகோணத்தில் இருந்து இருவரும் இருசக்கர வாகனத்தில் திருக்கண்ணமங்கை பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.
மேலும், தனது முடிவில் இளம் பெண் உறுதியாக இருந்துள்ளார். இதனால் ஏமாற்றம் அடைந்த பீரவின் குமார் அருகே இருந்த குளத்தில் குதித்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத இளம் பெண்ணும், காதலனை காப்பாற்ற குளத்தில் குதித்துள்ளார்.
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பிரவீன்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








