தமிழ்நாடு

மனப்பாடம் செய்து படித்தாலும் தமிழ்நாட்டில் பழனிசாமி Failதான் ஆவார் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

மனப்பாடம் செய்தாலும் பழனிசாமி Failதான் ஆவார் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

மனப்பாடம் செய்து படித்தாலும் தமிழ்நாட்டில் பழனிசாமி Failதான் ஆவார் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,”தமிழ்நாடு முழுவதும் 1,888 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நொல் கொள்முதல் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கொள்முதல் நிலையங்களில் 600 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் தினசரி 1000க்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது. மழையால் பாதித்த விவசாயி நிலங்கள் குறித்து முதற்கட்ட கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகிறது.

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. இதனால் தி.மு.க அரசை எடப்பாடி பழனிசாமி விமர்சித்து வருகிறோர். நாங்கள் மக்களுக்காக களத்தில் நின்று அவர்களது தேவைகளை நிறைவேற்றி வருகிறோம். விவசாயிகளிடம் நாடகமாடும் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி மனப்பாடம் செய்து படித்தாலும் Pass- ஆக மாட்டார் Fail-ல் ஆகிவிடுவார்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories