இன்றைய சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியால் எதையும் சாதிக்க முடியவில்லை. இதனால் தோல்வி முகத்துடன் செய்தியாளர்களிடம் பொய்யான தகவல்களை கூறியுள்ளார் என சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ரகுபதி பேட்டி அளித்துள்ளார்.
அப்போது அமைச்சர் ரகுபதி,”கரூர் துயர சம்பவத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முரண்பாடான கருத்துக்களயும், முழுக்க முழுக்க பொய்யாகவே பேசியுள்ளார். கூட்டணி என்கின்ற ஒற்றை அஜண்டாவோடு இன்று சட்டமன்றத்திற்கு வந்து தோல்வி கண்டு, அதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பொய்யான பல்வேறு செய்திகளை கூறியுள்ளார்.
நடிகர் விஜயின் திருச்சி, நாமக்கல் பரப்புரை கூட்டங்களில் யாருக்கும் எந்த விபரீதமும் ஏற்படவில்லை. ஆனால் அங்கும் பலர் மயக்கம் அடைந்தாகவும், அதற்கு, அதற்கு ஆதாரமும் உள்ளது.
நடிகர் விஜய் மிகவும் தாமதமாக வந்ததும் கூட்ட நெரிசலுக்கு ஒரு காரணம். கரூரில், எந்த அரசியல் கட்சிக்கும் வழங்காத வகையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 500 காவலர்கள், 106 ஊர்க்காவல் படையினர் பணியில் இருந்தனர்.
எடப்பாடி பழனிசாமி, எத்தனை கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வந்தாலும், திமுக அரசின் நான்காண்டு சாதனைகள் திராவிட மாடல் ஆட்சி இரண்டாம் பாகத்திற்கு கண்டிப்பாக கொண்டு செல்லும்” என தெரிவித்துள்ளார்.