தமிழ்நாடு

மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்த சென்னை மெரினா நீச்சல் குளம் : புதிய அம்சங்கள் என்ன ?

மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்த சென்னை மெரினா நீச்சல் குளம் : புதிய அம்சங்கள் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னையின் முக்கிய சுற்றுலா தளமாக விளங்கி வரும் மெரினா கடற்கரைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் வருகை புரிந்து நேரத்தை செலவழிப்பர். மெரினாவுக்கு வருவோரின் பொழுதுபோக்குடன், உடற்பயிற்சியை மேற்கொள்ளும் வகையில் சென்னை மாநகராட்சியின் நீச்சல் குளம் அமைக்கப்பட்டிருந்தது. .

இந்த மெரினா கடற்கரை நீச்சல் குளம் பராமரிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக பொதுமக்கள் அனுமதி தடை செய்யப்பட்டு இருந்தது. பராமரிப்பு பணிகள் தொடர்ந்து வேகமாக நடைபெற்று வந்த நிலையில், பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்த சென்னை மெரினா நீச்சல் குளம் : புதிய அம்சங்கள் என்ன ?

அதனைத் தொடர்ந்து இன்று காலை சென்னை மாநகராட்சியின் நீச்சல் குளம் மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளது. மாற்று திறனாளிகளுக்கு தனி கழிவறை, குளிக்குமிடம், மற்றும் குழந்தைகள் சறுக்கு தளம் உள்ளிட்ட அம்சங்கள் இங்கு இடம்பெற்றுள்ளது.

இந்த நீச்சல் குளத்தில் காலை 5.30 மணி முதல் மாலை 7.30 வரை பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதில் காலை 8.30 மணி முதல் காலை 9.30 மணி ஒரு மணி நேரம் பெண்களுக்கு என்று ஒதுக்கப்படுகிறது. இங்கு கட்டணமாக ஒரு மணி நேரத்திற்கு பெரியவருக்கு 50 ரூபாயும், சிறுவருக்கு 30 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories