தமிழ்நாடு

பா.ஜ.கவின் உண்மை அறியும் குழு அக்கறையா? சூழ்ச்சியா ? : தமிமுன் அன்சாரி கேள்வி!

பா.ஜ.கவின் உண்மை அறியும் குழு அக்கறையா? சூழ்ச்சியா ? என தமிமுன் அன்சாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

பா.ஜ.கவின் உண்மை அறியும் குழு அக்கறையா? சூழ்ச்சியா ? : தமிமுன் அன்சாரி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கரூர் துயரத்தை முன்னிட்டு பா.ஜ.க தலைமை அவசர அவசரமாக 'உண்மை அறியும் குழுவை ' அமைத்து அவர்களை இங்கு அனுப்பி உள்ளது. இது அக்கறையா? சூழ்ச்சியா ?. பா.ஜ.க துவங்கியுள்ள அரசியல் விளையாட்டுகள் கூர்ந்து கவனிக்க வேண்டியவை ஆகும் என மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இது குறித்து தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

குஜராத்தில் மோர்பி என்ற இடத்தில் சாத் பூஜையின்போது 30.10.2022 அன்று பாஜக அரசால் கட்டப்பட்ட தொங்கு பாலம் இடிந்து விழுந்து 142 பேர் உயிரிழந்தனர். பாலத்தின் தாங்கும் சக்தியை கடந்து மக்கள் அனுமதிக்கப்பட்டதால் இச்சம்பவம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

மணிப்பூரில் 03.05.2023 முதல் தொடங்கிய கலவரம் இப்போது வரை நீடிக்கிறது. அங்கு பெண்கள் வீதிகளில் நிர்வாணப்படுத்தப்பட்டு பட்டனர். இதுவரை 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேற்கண்ட துயாங்களுக்காக பாஜகவின் சார்பில் 'உண்மை அறியும் குழு' அமைக்கப்படவில்லை.

இப்போது கரூர் துயரத்தை முன்னிட்டு பாஜக தலைமை அவசர அவசரமாக 'உண்மை அறியும் குழுவை ' அமைத்து அவர்களை அங்கு அனுப்பி உள்ளது. இது அக்கறையா? சூழ்ச்சியா ?

தாங்கள் ஆளும் மாநிலங்களுக்கு ஒரு நிலைபாடு! எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு வேறு நிலைபாடா? மக்கள் நலன் மீதான அக்கறை எனில், குஜராத் மோர்பி பால விபத்திற்கும், மணிப்பூர் கலவரத்திற்கும் இதேபோன்று 'உண்மை அறியும் குழுவை' அமைத்திருந்தால் நமக்கு இந்த சந்தேகம் வராது.

கரூர் துயரத்தில் நீதியின் அடிப்படையில் உண்மைகள் வெளிவர வேண்டும் என்பதும், இனி இது போன்ற சம்பவங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதுமே நம் அனைவரின் விருப்பமாகும். ஆனால் இதில் பாஜக துவங்கியுள்ள அரசியல் விளையாட்டுகள் கூர்ந்து கவனிக்க வேண்டியவை ஆகும்.

banner

Related Stories

Related Stories